மாது,
ஓ : அசைகள். (52)
ஆர்த்தன
வியங்க ளெல்லா மமரர்மந் தார மாரி
தூர்த்தனர் வேள்விச் செந்தீச் சுழித்தது வலமாய்த் துள்ளி
வார்த்தன மடவார் நாவின் முளைத்தன வாழ்த்து மன்றல்
பார்த்தனர் கண்க ளெல்லாம் பெற்றன படைத்த பேறு. |
(இ
- ள்.) இயங்கள் எல்லாம் ஆர்த்தன - பலவகை இயங்களெல்லாம்
ஒலித்தன; அமரர் மந்தார மாரி தூர்த்தனர் - தேவர்கள் கற்பக மலர்
மழையைப் பொழிந்தனர்; வேள்விச் செந்தீ வலமாய்த் துள்ளிச் சுழித்தது -
வேள்விக் குண்டத்தின்கண் சிவந்த தீயானது வலமாகச் சுழன்று குதித்
தெழுந்தது; வார் தனம் மடவர் நாவின் வாழத்து துளைத்தன - கச்சணிந்த
கொங்கைகளையுடைய மகளிர் நாவின்கண் வாழ்த்துப் பாடல்கள் அரும்பின;
மன்றல் பார்த்தனர் கண்கள் எல்லாம் - திருமண விழாவைப் பார்த்தவர்களின் கண்களனைத்தும்,
படைத்த பேறு பெற்றன - படைக்கப் பெற்றதனாலாகிய
பயனை அடைந்தன எ - று.
சுழித்துத்
துள்ளியது என விகுதி பிரித்துக் கூட்டுக. மன்றல் வாழ்த்து
முளைத்தன எனலுமாம். (53)
பொதியவிழ் கடப்பந் தண்டார்ப் புயத்திளங் காளை யன்னான்
முதியவர் செந்தீ யோம்ப வின்னிய முழங்கக் காந்தி
மதியைமங் கலநாண் பூட்டி வரிவளைச் செங்கை பற்றி
விதிவழி யேனை மன்றல் வினையெலா நிரம்பச் செய்தான். |
(இ
- ள்.) பொதி அவிழ் கடப்பம் தண்தார் - முறுக் கவிழ்ந்த
கடப்பமலரின் தண்ணிய மாலையணிந்த, புயத்து இளங்காளை அன்னான் -
திருத்தோளினையுடைய முருகக்கடவுளை யொத்த உக்கிர வழுதி, முதியவர்
செந்தீ ஓம்ப - மூதறிவுடைய முனிவர் ஓமம் வளர்க்கவும், இன் இயம் முழங்க்
- இனிய இயங்கள் ஒலிக்கவும், காந்திமதியை மங்கல நாண் பூட்டி -
காந்திமதி யம்மையை மங்கல நாண் அணிந்து, வரிவளை செங்கைபற்றி -
வாகளையுடைய வளையலணிந்த் சிவந்த கையைப்பற்றி, ஏனைமன்றல் வினை
எலாம் - மற்றைய மணவினைகளனைத்தையும், விதிவழி நிரம்பச் செய்தான் -
வேத விதிப்படி நிரம்பு மாறு செய்து முடித்தான் எ - று.
கடம்பு
என்பது வலித்து அம் சாரியை பெற்றது. நாண் பூட்டி
யென்பதும் செங்கைபற்றி யென்பதும் ஒரு சொன்னீரவாய் இரண்டாவதற்கு
முடிபாயின. எலாம் - எல்லாமும். (54)
[-
வேறு]
|
எண்ணி லாத
வளத்தினொடு
மிரவி மருமான் மடப்பிடியைங்ப
பண்ணி லாவி மறையொழுக்கம்
பயப்ப வேள்வி வினைமுடித்துத் |
|