I


566திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



தண்ணிலா வெண் கலைமதியுந்
     தாரா கணமுந் தவழ்ந்துழல
விண்ணி லாவு மணிமாட
     வீதி வலமாய் வருமெல்லை.

     (இ - ள்.) எண் இலாத வளத்தினொடும் - அளவில்லாத
செல்வத்துடன், இரவி மருமான் மடப் பிடியை - சூரியன் மரபில் வந்த
சோமசேகரன் புதல்வியாகிய காந்திமதியை, பண் நிலாவு மறை ஒழுக்கம்
பயப்ப வேள்வி வினை முடித்து - இசையமைந்த வேதத்தின் விதி நிரம்ப
மண வினையை முடித்து, தண் நிலா வெண்கலை மதியும் தாரா கணமும்
தவழ்ந்து உழல - தண்ணிய ஒளி பொருந்திய வெள்ளிய கலையையுடைய
திங்களும் உடுக்கணங்களும் தவழ்ந்து வருமாறு, விண் நிலாவும் - வானின்
கண் (உயர்ந்து) விளங்கும், மணி மாட வீதி - அழகிய மாடங்களையுடைய
வீதியை, வலமாய் வரும் எல்லை - வலமாக உலாவரும் பொழுது எ - று.

     மடப்பிடி - இளமை பொருந்திய பெண்யானை போல்வாள்; பிடி
நடையாலுவமம், வேள்வி வினை முடித்து என்றது அநுவாதம். உழல
நிலாவுமென்க. அணி மாடமேனப் பிரித்தலுமாம். வலமாக வெனத்
திரிக்க. (55)

மின்னேர் பொன்னந் தொடியினரு
     மென்செம் பஞ்சி யடியினரும்
பொன்னேர் மணிப்பூண் முலையினரும்
     புலம்பு மணிமே கலையினரும்
அன்னே ரோதித் தாரினரு
     மாகிக் கண்ணு மனமுமவன்
முன்னே தூது நடப்பதென
     நடப்ப நடந்தார் முகிழ்முலையார்.

     (இ - ள்.) மின்நேர் பொன் அம்தொடியினரும் - மில்லையொத்த
பொன்னாலாகிய அழகிய வளையலை அணிந்தவரும், மெய் செம்பஞ்சி
அடியினரும் - மெல்லிய செம்பஞ்சிக் குழம்பூட்டிய அடியினையுடைய வரும்,
பொன் ஏர் மணிப்பூண் முலையினரும் - பொன்னலாகிய அழகிய மணிக்கலன்
விளங்கும் கொங்கையையுடையவரும், புலம்பும் மணி மேகலையினரும் -
ஒலிக்கின்ற அழகிய மேகலையை அணிந்த வரும், அல் நேர் ஒதித்தாரினரும்
ஆகி - இருள்போன்ற கூந்தலில் மாலையை யணிந்தவரும் ஆகி, கண்ணும்
மனமும் அவன் முன்னே தூது நடப்பதென நடப்ப - கண்களும் மனமும்
அவன் முன்னே தூது செல்லுதல் போல முன்னேசெல்ல, முகிழ முலையார்
நடந்தார் - தாமரை யரும்பினை யொத்த தனங்களை யுடைய மகளிர்
சென்றார்கள் எ - று.

     தொடியினரும் அடியினரும் எனவும், முலையினரும் கலையினரும்
எனவும் இயைபெதுகை நயம் அமைந்திருத்தல் காண்க. ஏர் : உவம
வுருபுமாம். நடப்பது : தொழிற் பெயர். முகிழ் கோங்கரும்புமாம்; முகிழத்த
வெனினும் பொருந்தும். (56)