I


உக்கிரபாண்டியருக்கு வேல்வளை செண்டு கொடுத்த படலம்567



சுருங்கு மிடையார் தன்பவனி
     தொழுது வருவார் தமக்கிரங்கி
மருங்குற் பாரங் கழிப்பான்போற்
     கலையைக் கவர்ந்தும் வளைத்தோண்மேல்
ஒருங்கு பாரங கழிப்பான்போல்
     வளையைக் கவர்ந்து முள்ளத்துள்
நெருங்கு பாரங் கழிப்பான்போ
     னிறையைக் கவர்ந்து நெறிச்செல்வான்.

     (இ - ள்.) தன் பவனி தொழுது வருவார் - (உக்கிர குமாரன்) தனது
திருவுலாவைத் தரிசித்து வருவாராகிய, சுருங்கும் இடையார் தமக்கு இரங்கி
- சிறுகிய இடையினையுடைய மகளிர்க்கு இரங்கி, மருங்குல் பாரம் கழிப்பான்
போல் - அவரது இடையின் பாரத்தைக் கழிப்பவன் போல, கலையைக்
கவர்ந்தும் - மேகலையை வௌவியும், வளைத்தோள் மேல் பாரம் ஒருங்கு
கழிப்பான் போல் - மூங்கிலையொத்த தோளின் பாரத்தை ஒரு சேர
நீங்குபவன் போல, வளையைக் கவர்ந்தும் - வளையல்களை அபகரித்தும் -
கற்பினைக் கவர்ந்தும், நெறிச் செல்வான் - வீதியிற் செல்வான் எ - று.

     வருவாராகிய இடையார் தமக் கென்க. கலை - மேகலை; முதற் குறை.
மகளிர் வேட்கை நோயால் உடல் மெலிந்து கலையும் வளையும் கழலப்
பெறுதலையும், நிறையிழத்தலையும் உக்குரகுமாரன் அவர் மேல் இரக்கமுற்று
மருங்குல் முதலியவற்றின் பாரத்தைக் கழிப்பான் போற் கவர்ந்து செல்வான்
எனக்கூறினார். இது தற்குறிப்பேற்றவணி. (57)

வான மதிசேர் முடிமறைத்த வழுதி மகனே யிவனென்றால்
ஆனை யெருத்திற் சிங்கவிள வடலே றென்ன வயல்வேந்தர்
சேனை தழுவ வரும்பவனிக் கொப்பே தொப்புச் செப்புங்கால்
யானை மகளை மணந்துவரு மிளையோன் பவனிச் செல்வமே.

     (இ - ள்.) வானமதி சேர் முடி மறைத்த வழுதி மகனே இவன்
என்றால் - வானின்கண் உள்ள பிறையை யணிந்த சடையை மறைத்து
வந்தருளிய சுந்தர பாண்டியன் புதல்வனே இவ் வுக்கிரகுமரனென்றால்,
ஆனை எருத்தில் - யானையின் பிடரியில், இள அடல் சிங்க ஏறு என்ன -
இளமையாகிய வலிய ஆண் சிங்கம்போல இவர்ந்தருளி, அயன் வேந்தர்
சேனை தழுவ - வேற்று மன்னரின் படைகள் சூழ, வரும் பவனிக்கு ஒப்பு
ஏது - வருகின்ற திருவுலாவிற்கு ஒப்பாவது வேறுயாது, செப்புங்கால் -
சொல்லுமிடத்து, யானை மகளை மணந்து வரும் இளையோன் பவனிச்
செல்வமே - தெய்வ யானையாரைத் திருமணஞ் செய்து வருகின்ற முருகக்
கடவுளின் திருவுலாச் சிறப்பே, ஒப்பு - ஒப்பாகும் எ - று.

     எருத்தில் ஏறி வரும் பவனி யென்க; யானை யெருத்தில் ஏறி வரும்
சிங்க வேறு போல என இல்பொருளுவமை யாக்கலும் ஆம். செப்புங்கால்