செல்வமே, ஒப்பு என
மாறுக. செப்புங்கால் - உவமை கூறவேண்டு
மென்னின், முடி மறைத்த வழுதி மகனே இவன் என்பதனால் இவன்
இளையோனின் வேறல்லன் என்பது தோன்ற நின்றமையின் இவனது
பவனியும் தானே தனக்கு ஒப்பென்பதாயிற்று. இந்திரனது வெள்ளை
யானையால் வளர்க்கப்பட்டமையால் "யானை மகளை" என்றார். யானை
ஆனை யெனத் திரிந்தது. (58)
இம்மை தனிலு
நன்மைதரு
மீசன் றனையும் வாசவற்கு
வெம்மை தருவன் பழிதவிர்த்த
விமலன் றனையு மங்கயற்கண்
அம்மை தனையும் பணிந்துமீண்
டரசன் கோயி லடைந்தீன்றோர்
தம்மை முறையா லடிக்கமலந்
தலையிற் பணிந்தான் றனிக்குமரன். |
(இ
- ள்.) இம்மை தனிலும் நன்மை தரும் ஈசன் தனையும் -
இம்மையிலேயே பயனை அளிக்கும் சிவபெருமானையும், வாசவற்கு
வெம்மைதரு வன் பழி தவிர்த்த விமலன் தனையும் - இந்திரனுக்குத் துன்பந்
தந்த வலிய பழியை நீக்கி யருளிய சோமசுந்தரக் கடவுளையும், அங்கயற்கண்
அம்மைதனையும் - அங்கயற்கண் ணம்மையாரையும், தனி குமரன் பணிந்து
மீண்டு - ஒப்பற்ற உக்கிரகுமாரன் வணங்கித் திரும்பி, அரசன் கோயில்
அடைந்து - அரசன் மாளிகையை அடைந்து, ஈன்றோர் தம்மை அடிக்கமலம்
- தன்னைப்பெற்ற தந்தை தாயரின் திருவடித் தாமரைகளை, முறையால்
தலையின் பணிந்தான் - முறைப்படி தலையினால் வணங்கினான் எ - று.
இம்மைதனிலும்
நன்மை தரும் ஈசன் என்பது சுந்தர பாண்டியனாகிய
இறைவனால் நடுவூரில் நிறுவி வழிபடப் பெற்ற சிவலிங்கப் பெருமான்
திருப்பெயர்; இதனை,
"மெய்ம்மை நூல்
வழியே கோயில் விதித்தருட்குறி நிறீஇப்பேர்
இம்மையே நன்மை நல்கும் இறையென நிறுவி" |
என வரும் திருமணப்படலச்
செய்யுளா லறிக. உம்மையை அசைநிலை
யாக்கி ஏகாரம் விரிக்க. தம்மை - தம்முடைய; வேற்றுமை மயக்கம்;
பொருந்தவென ஒரு சொல் வருவித்து, அடிக் கமலம் தலையிற் பொருந்த
ஈன்றோர் தம்மைப் பணிந்தான் என்றுரைத்தலுமாம். (59)
ஆனா வாறு சுவையடிசி
லயில்போர் தம்மை யயில்வித்து
நானா வரிசை வரன்முறையா
னல்கி விடையு நல்கிப்பின்
வானா டவர்க்கும் விடைகொடுத்து
மதிக்கோ னொழுகி வைகுநாள்
தேனார் கண்ணித் திருமகனுக்
கிதனைச் செப்பி யிதுசெய்வான். |
|