(இ
- ள்.) மதிக்கோன் - திங்கள் மரபுக்கு இறைவனாகிய சுந்தர
பாண்டியன், ஆறுசுவை ஆனா அடிசில் - அறுவகைச் சுவையும் நீங்காது
பொருந்திய உணவினை, அயில்வோர் தம்மை அயில்வித்து - உண்போரை
உண்பித்து, வரன்முறையால் நானாவரிசை நல்கி - முறைப்படி
பலவரிசைகளையும் அளித்து, விடையும் நல்கி - விடையுங் கொடுத்து, பின்
- பின்பு, வானாடவர்க்கும் விடைகொடுத்து - தேவர்களுக்கும் விடைதந்து,
ஒழுகி வைகு நாள் - ஆட்சி புரிந்துவரும் காலத்தில், தேன் ஆர் கண்ணித்
திருமகனுக்கு இதனைச் செப்பி இது செய்வான் - தேன் நிறைந்த மாலையை
யணிந்த புதல்வனுக்கு இதனைக் கூறி இதனைச் செய்வான் எ - று.
ஆறென்னும்
எண்ணுப் பெயர் திரியாது நின்றது. செயப்படு பொருள்
இரண்டாயின; பகைவரைச் சிறைச்சாலையை அடைவித்தான் என்பது போல.
நானா - பல. இதுவென் பன பின்வருவன. (60)
மைந்த கேட்டி யிந்திரனுங்
கடலு முனக்கு வான்பகையாஞ்
சந்த மேருத் தருக்கடையுஞ்
சதவேள் விக்கோன் முடிசிதற
இந்த வளைகொண் டெறிகடலி
லிவ்வேல் விடுதி யிச்செண்டால்
அந்த மேருத் தனைப்புடையென்
றெடுத்துக் கொடுத்தா னவைமூன்றும். |
(இ
- ள்.) மைந்த - புதல்வனே, கேட்டி - கேட்பாயாக, இந்திரனும்
கடலும் உனக்கு வான்பயைாம் - தேவேந்திரனும் கடலும் நினக்குப் பெரிய
பகையாகும்; சந்தம் மேரு தருக்கு அடையும் - அழகிய மேருமலை
இறுமாப்புறும் (ஆகலின்), சதவேள்விக் கோன்முடி சிதற - இந்திரன் முடி
சிதறுமாறு, இந்த வளை கொண்டு எறி - இந்த வளையினைக்கொண்டு
எறிவாய், கடலில் இவ் வேல்விடுதி - கடலின் கண் இந்த வேற்படையை
விடுவாய், இச்செண்டால் - இந்தச் செண்டினால், அந்த மேருதனைப் புடை
- அந்த மேருவைத் தாக்குவாய், என்று - என்று கூறி, அவை மூன்றும்
எடுத்துக் கொடுத்தான் - அம் மூன்றையும் எடுத்துக் கொடுத்தருளினான்
எ - று.
கேட்டி,
இகரவீற்று வியங்கோள். சதவேள்விக் கோன் - சதமகன்;
இந்திரன். (61)
அன்ன மூன்று படைக்கலமுந் தொழுது வாங்கி யடலேறு
தன்னை நேரா யெதிர்நிற்குந் தனயன் றனையுக் கிரவழுதி
என்ன வாதி மறைமுழங்க வியங்க ளேங்க முடிகவித்துத்
தன்ன தாணை யரசுரிமைத் தனிச்செங் கோலுந்* தானல்கா. |
(இ
- ள்.) அன்ன ன்று படைக்கலமும் தொழுது வாங்கி - அந்த
மூன்று படைக்கலங்களையும் வணங்கி வாங்கிக்கொண்டு, அடல் ஏறு
|