I


570திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



தன்னை நேராய் எதிர் நிற்கும் தனயன்தனை - வலிய ஆண்சிங்கத்தைப்
போன்று எதிலே நிற்கும் புதல்வனை, உக்கிர வழுதி என்ன - உக்கிர
பாண்டிய வேந்தன் என்று கூறும்படி, ஆதிமறை முழங்க - முதன்மையுடைய
வேதங்கள் முழங்கவும், இயங்கள் ஏங்க - பல்லியங்கள் ஒலிக்கவும், முடி
கவித்து - முடிசூட்டி, தன்னது ஆணை அரசு உரிமைத் தணிச் செங்கோலும்
நல்கா - தனது ஆணையையும் அரசாட்சிக்குரிய ஒப்பற்ற செங்கோலையும்
கொடுத்தருளி எ - று.

     பாண்டி வேந்தாக உலகங்கூற வென்பார் ‘உக்கிர வழுதி யென்ன’
என்றார். தன்னை, தன் : சாரியை. தன்னது, னகரம் விரித்தல். ஆணை -
ஆக்கினையாகிய சக்கரம். தான், அசை; எழுவாயுமாம். (62)

சூட்சி வினையிற் பொன்னனைய
     சுமதி தன்னைத் தொன்னூலின்
மாட்சி யறிஞர் தமைநோக்கி
     வம்மி னிவனைக் கண்ணிமைபோற்
காட்சி பயக்குங் கல்விபோற்
     காப்பீ ரிதுநுங் கடனிம்மண்
ஆட்சி யிவன தென்றிளைய
     வரியே றனையான் றனைநல்கா.

     (இ - ள்.) சூட்சி வினையில் பொன் அனைய சுமதி தன்னை -
ஆலோசனைத் தொழிலில் பிருகற்பதியை ஒத்த சுமதியையும், தொல் நூலின்
மாட்சி அறிஞர் தமை - பழமையாகிய நீதிநூல் ஆராய்ச்சியின் மாட்சியுடைய
அறிஞரையும், நோக்கி - பார்த்து, வம்மின் - வாருங்கள், இவனை -
இவ்வுக்கிர வழுதியை, கண் இமைபோல் கண்ணின் இமைபோலவும், காட்சி
பயக்கும் கல்விபோல் - அறிவினைக் கொடுக்கும் கல்விபோலவும், காப்பீர்
- காக்கக் கடவீர்; இது நும் கடன் - இது நுமது கடமையாகும், இம் மண்
ஆட்சி இவனது என்று - இந்நிலவுலகின் ஆட்சி இவனுடையதாம் என்று
கூறி, இளைய அரி ஏறு அனையான் தனை நல்கா - இளைய ஆண் சிங்கம்
போன்ற அவ்வுக்கிர வழுதியை அவரிடத்தில் அளித்து எ - று.

     சூட்சி : சூழ்ச்சி யென்பதன் மரூஉ. சுமதி - முதலமைச்சன். கண்ணை
இமை காப்பது போலவும், கல்வியுடையாரை அக்கல்வி காப்பது போலவும்
இவனைக் காப்பீர் என்றான்; இம்மைக்கும் மறுமைக்கும் இடருண்டாகாமற்
காக்க வேண்டு மென்ற தாயிற்று. நல்கா - கையடையாகத் தந்து; இதனை
ஒப்புவித்தல் என்பர். (63)

[- வேறு]
வெய்யவேற் காளை யன்னான் றன்னையும் வேறு நோக்கி
ஐயவிவ் வையந் தாங்கி யளித்தன நெடுநா ளிந்த
மையறு மனத்தார் சொல்லும் வாய்மையா றொழுகி நீயுஞ்
செய்யகோன் முறைசெய் தாண்டு திருவொடும் பொலிக வென்றான்.