(இ
- ள்.) வெய்வேலை காளை அன்னான் தன்னையும் வேறு நோக்கி
- வெவ்விய வேற்படையை யுடைய முருகளை யொத்த புதல்வனையும்
தனியாக நோக்கி, ஐய - ஐயனே, இவ்வையம் தாங்கி நெடுநாள் அளித்தனம்
- இவ்வுலகினைச் சுமந்து நெடுங் காலம் ஆட்சி புரிந்தனம்; நீயும் - (இனி)
நீயும், இந்த மை அறு மனத்தார் சொல்லும் வாய்மை யாறு ஒழுகி - இந்தக்
குற்றமற்ற உள்ளத்தினை யுடையார் சொல்லும் உண்மை வழியே நடந்து,
செய்ய கோல் முறை செய்து ஆண்டு - செங்கோலால் முறை புரிந்து ஆண்டு,
திருவொடும் பொலிக என்றான் - செல்வத்தோடும் விளங்குக என
வாழ்த்தியருளினான் எ - று.
வேறு
நோக்கி - சிறப்பாக நோக்கி. நெடுநாள் அளித்தனம் என்றது
இனி நீ அளிக்க வேண்டு மென்னும் குறிப்பிற்று. முறை செய்தல் - நீதி
செலுத்தல். வாய்மையாறொழுகி முறை செய்து என்றது உறுதி யுரைத்தலும்,
திருவொடும் பொலிக என்றது வாழ்த்துதலும் ஆம். தன்னையும், நீயும்
என்பவற்றிலுள்ள உம்கைள் எச்சப்பொருளன. (64)
பன்னருங் கணங்க ளெல்லாம் பண்டைய வடிவ மாகத்
தன்னருட் டுணையாய் வந்த தடாதகைப் பிராட்டி யோடும்
பொன்னெடுங் கோயில் புக்குப் பொலிந்தன னிச்சை தன்னால்
இன்னருட் படிவங் கொள்ளு மீறிலா வின்ப மூர்த்தி. |
(இ
- ள்.) இச்சை தன்னால் - தனது இச்சையானே, இன் அருள்
படிவம் கொள்ளும் - இனிய அருளுருவம் கொள்ளா நிற்கும், ஈறு இலா
இன்ப மூர்த்தி - முடிவில்லாத இன்ப வடிவான சுந்தர பாண்டியனாகிய
இறைவன், பன் அரும் கணங்கள் எல்லாம் - சொல்லுதற்கரிய
கணங்களனைத்தும், பண்டைய வடிவமாக - முன்னைய வடிவமாக, தன்
அருள் துணையாய் வந்த - தனது அருட்டுணையாக வந்தருளிய, தடாதகைப்
பிராட்டியோடும் - தடாதகைப் பிராட்டியாரோடும், பொன் நெடுங் கோயில்
புக்குப் பொலிந்தனன் - பொன்னாலாகிய பெரிய திருக்கோயிலினுட் சென்று
விளங்கினன் எ - று.
மேல்,
திருமணப் படலத்தில்,
"திண்டிறற் சங்கு
கன்னன் முதற்கணத் தேவர் தாமும்
பண்டைய வடிவ மாறிப் பார்த்திபன் பணியி னின்றார்" |
என்றாராகலின், ஈண்டு
அவர் பண்டைய வடிவமாயினரென்றார். இறைவனது
சத்தியே அவனுக்குத் துணையாகலின் தன்னருட் டுணையாய் வந்த என்றார்.
புக்குப் பொலிந்தனன் - சிவலிங்கப் பெருமானை அதிட்டித்து விளங்கினான்.
இறைவன் கொள்ளும் வடிவிற்கு அவன திச்சையே காரணமென்பார் இச்சை
தன்னால் என்றார்; பிறரால் உண்டாக்கப் படுபவன் அல்லனென்றவாறு.
அவன் வடிவம் அருளாதலை
"நிறுத்திடு நினைந்த
மேனி நின்மல னருளி னாலே" |
என்னும்
சிவஞானசித்தியா லறிக. (65)
|