[கலிவிருத்தம்]
|
பின்ன ருக்கிரப்
பெயர் தரித்தவத்
தென்னர் கோமகன் றெய்வ நான்மறை
மன்னு நல்லறம் வளர வையகந்
தன்ன தாணையாற் றாங்கி வைகினான் |
(இ
- ள்.) பின்னர் - பின்பு, உக்கிரப் பெயர் தரித்த அத் தென்னர்
கோமகன் - உக்கிரனென்னும் பெயரைத் தாங்கிய அப்பாண்டியர் பெருமான்,
தெய்வ நான்மறை மன்னு நல் அறம் வரை - தெய்வத் தன்மை பொருந்திய
நான் மறைகளிற் கூறிய நிலைபெற்ற நல்ல அறங்கள் வளருமாறு, வையகம்
தன்னது ஆணையால் தாங்கி வைகினான் - நிலவுலகத்தைத் தனது
ஆணையினாலே பாதுகாத்து அரசாண்டிருந்தான் எ - று.
தன்னது
: விரித்தல். பகைவர் முதலாயினோரால் நலிவுண்டாகாமற் புரந்தா னென்பார் ஆணையாற்றாங்கி
என்றார். (66)
ஆகச்
செய்யுள் - 668.
|