வங்க வேள் வெள்ள மாட* மதுரை மீது வருசெயல்
கங்குல் வாய திங்கண் மீது காரி வாய காருடல்
வெங்கண் வாள ராவி ழுங்க வீழ்வ தொக்கு மலதுகார்
அங்கண்மூட வருவ தொக்கு மல்ல தேது சொல்வதே. |
(இ
- ள்.) வங்க வேலை வெள்ளம் - மரக்கலங்கள் செல்லும் கடலின்
வெள்ளமானது, மாட மதுரை மீது வரு செயல் - மாடங்களையுடைய
மதுரைப்பதியின் மீது வருகின்ற தன்மை, கங்குல் வாய திங்கள் மீது -
இரவினிடத்ததாகிய சந்திரன்மேல், காரி வாய - நஞ்சு பொருந்திய
வாயினையுடைய, கார் உடல் வெங்கண் வாள் அரா - கரிய உடலையும்
வெவ்விய கண்களையும் உடைய கொடிய இராசு என்னும் பாம்பானது,
விழுங்க வீழ்வது ஒக்கும் - அதனை விழுங்குதற்கு விரைந்து வருதலைப்
போலும்; அலது - அன்றி, கார் - மேகங்கள், அங்கண் மூடவருவது ஒக்கும்
- அம் மதுரையை மறைத்தற்கு வருதலை ஒக்கும்; அல்லது - அல்லாமல்.
சொல்வதுஏது - வேறு கூறுவது யாது எ - று.
வங்கத்தை
யுடையவெனக் கடலுக்கு அடை கூறினார். கங்குல் வாயது
காரி வாயது என்பன துவ்வீறு தொக்கு நின்றன. திங்களினமிழ்தால் தூய்மை
செய்ப் பெற்ற மதுரைமீது கடல் வருவதற்குத் திங்கள்மீது கரும் பாம்பு
வருதலை உவமையாகக் கூறியது பெரிதும் பொருத்த முடைத்தாம். கார் மூட
வருவதென்றது பின்பு வருணனான் ஏவப்பட்டு ஏழு மேகங்களும் மதுரையை
அழிக்க வென வருஞ் செய்தியை உட்கொண்டு கூறியது. வீழ்வது, வருவது
என்பன தொழிற்பெயர்கள். அலது - அன்றி. ஒக்குமென்று கூறுவதல்லால்
என விரிக்க. (8)
வட்ட யாமை பலகை வீசு வாளை வாள்கள் மகரமே
பட்ட யானை பாய்தி ரைப்ப ரப்பு வாம்ப ரித்திரள்
விட்ட தோணி யிரத மின்ன விரவு தானை யொடுகடல்
அட்ட மாக வழுதி மேல மர்க்கெ ழுந்த தொக்குமே. |
(இ
- ள்.) வட்ட யாகை பலகை - (அன்றி) வட்டமாகிய ஆமைகள்
கேடகங்களாக. வீசு வாளை வாள்கள் எறிகின்ற வாளை மீன்கள் வாட்
படைகளாக, மகரம் பட்ட யானை - சுறா மீன்கள் நெற்றிப் பட்டத்தையுடைய
யானைகளாக, பாய் திரைப்பரப்பு வாம்பதித் திரள் - பரந்த
அலைக்கூட்டங்கள் தாவுகின்ற குதிரைக்கூட்டங்களாக, விட்ட தோணி இரதம்
- ஓடவிட்ட தோணிகள் தேர்களாக, இன்ன விரவு தானையொடு -
இத்தன்மையன விரவிய சேனையோடு, கடல் - கடலானது, அட்டமாக -
எதிராக, வழுதிமேல் அமர்க்கு எழுந்தது ஒக்கும் - உக்கிர பாண்டியன்மேல்
போருக்கு எழுந்ததைப் போலும் எ - று.
அட்டம்
- எதிர், குறுக்கு;
"மஞ்சலைக்கு
மாமலைச் சரிப்புறத்து வந்தமா
அஞ்சவித் தடர்க்கு நாய்க ளட்டமாக விட்டு" |
என்பது
திருத்தொண்டர் புராணம். அட்டம் என்பதற்குப் பகையென்றும்
பொருள் கூறுவர்; தமிழ் லெக்சிகன் காண்க. (9)
(பா
- ம்.) * வெள்ளை மாடம்.
|