இன்ன வாறெ ழுந்த வேலை மஞ்சு றங்கு மிஞ்சிசூழ்
நன்ன கர்க்கு ணக்கின் வந்து நணுகு மெல்லை யரையிரா
மன்ன வன்க னாவின் வெள்ளி மன்ற வாணர் சித்தராய்
முன்னர் வந்தி ருந்த ரும்பு முறுவ றோன்ற மொழிகுவார். |
(இ
- ள்.) இன்னவாறு எழுந்த வேலை - இங்ஙனம் எழுந்த
கடலானது, மஞ்சு உறங்கும் இஞ்சி சூழ் நல் நகர் - முகில் உறங்கப் பெறும்
மதில் சூழ்ந்த நல்ல அம்மதுரைப்பதியின், குணக்கின் வந்து நணுகும் எல்லை
- கிழக்குத் திக்கில் வந்து நெருங்கு மளவில், அரை இரா - நடு இரவில்,
மன்னவன் கனாவில் - பாண்டி மன்னன் கனவில் கண், வெள்ளி மன்ற
வாணர் - வெள்ளியம்பலவாணர், சித்தராய் - ஒரு சித்த மூர்த்தியாய், முன்னர் வந்திருந்து
- முன்னே தோன்றி, அரும்பு முறுவல் தோன்ற மொழிகுவார் -
அரும்புகின்ற புன்னகை தோன்ற மொழிகின்றார் எ - று.
வாணர்
: வாழ்நர் என்பதன் மரூஉ. மொழிகுவார், கு : சாரியை. (10)
வழுதி யுன்ற னகர ழிக்க வருவ தாழி வல்லைணீ
எழுதி போதி வென்றி வேலெ றிந்து வாகை பெறுகெனத்
தொழுத செங்க ரத்தி னான்று திக்கு நாவி னானெழீஇக்
கழுது றங்கு கங்கு லிற்க னாவு ணர்ந்து காவலான். |
(இ
- ள்.) வழுதி - பாண்டியனே, உன் தன் நகர் அழிக்க - உனது
நகரத்தை அழிக்கும் பொருட்டு, ஆழி வருவது - கடலானது வருகின்றது
(ஆதலால்), நீ வல்லை எழுதி - நீ விரைந்து எழுந்து, போதி - போய்,
வென்றி வேல் எறிந்து வாகை பெறுக என - வெற்றி பொருந்திய
வேற்படையை விடுத்து வென்றி பெறுவாயாக என்று கூற, காவலான் -
னலகினைப் பாதுகாத்தலை யுடைய உக்கிர வழுதி, தொழுத செங்கரத்தினான்
- கூப்பிய சிவந்த கைகளை யுடையனாய், துதிக்கும் நாவினன் - துதிக்கின்ற
நாவினையுடையவான், எழீஇ - எழுந்து, கழுது உறங்கு கங்குலின் கனா
உணர்ந்து - பேயும் உறங்குகின்ற நள்ளிரவில் தான் கண்ட கணவினை
யுணர்ந்து எ - று.
எழுதி
- எழுவாய்; போதி - போவாய்; இவற்றை எச்சமாக்குக. வாகை
- வென்றி யெய்தினோர் சூடும் மாலை; வெற்றியைக் குறித்தது. பெறுகென :
அகரடந தொகுத்தல். எழீஇ : சொல்லிசை யளபெடை. கழுதுமென்னும்
உம்மை தொக்கது. (11)
கண்ணி றைந்த
வமளி யிற்க ழிந்து வாயில் பலகடந்
துண்ணி றைந்த மதிய மைச்ச ருடன்வி ரைந்து குறுகியே
மண்ணி றந்த* தெனழு ழங்கி வருத ரங்க வாரிகண்
டெண்ணி றந்த+வதிச யத்த னாகி நிற்கு மெல்லைவாய். |
(இ
- ள்.) கண் நிறைந்த அமளியில் கழிந்து - கண்டுயின்ற
சேக்கையினின்றும் நீங்கி, வாயில் பல கடந்து - அரண்மனை வாயில்
(பா - ம்.) *
மண்ணிறைந்த +எண்ணிறைந்த.
|