I


578திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



பலவற்றையும் கடந்து, உள் நிறைந்த மதி அமைச்சருடன் - உள்ளே நிறைந்த
அறிவினையுடைய மந்திரிகளுடன், விரைந்து குறுகி - விரைந்து சென்று, மண்
இறந்தது என - நிலவுலகு அழிந்த தென்று கூறுமாறு, முழங்கி வரு
தரங்கவாரி கண்டு - ஆரவாரித்து வருகின்ற அலைகளையுடைய
கடலைநோக்கி, எண் இறந்த அதிசயத்தனாகி நிற்கும் எல்லைவாய் -
அளவிறந்த வியப்படைந்தவனாகி நிற்குங்கால் எ - று.

     (இ - ள்.) துயிலுதலைக் கண்வளர்தல் என்பவாகலின் வளர்தலை
நிறைதலாக்கிக் ‘கண்ணிறைந்த’ என்றார்; கண்ணுக்கு நிறைந்த
அமளியென்றும், கள் நிறைந்த மலரமளி யென்றும் கூறலுமாம். இறந்ததென,
இறந்த காலத்தாற் கூற. (12)

கனவில் வந்த வேடர் நனவில் வந்து காவலோன்
நினைவு கண்டு பொழுது தாழ நிற்ப தென்கொ லப்பனே
சினவி வேலை போல வந்த தெவ்வை மான வலிகெட
முனைய வேலெ றிந்து ஞால முடிவு தீர்த்தி யாலென.

     (இ - ள்.) கனவில் வந்த சித்த வேடர் - கனவிலே தோன்றிய
சித்தமூர்த்தி, நனவில் வந்து - நனவிலும் எழுந்தருளி வந்து, காவ லோன்
நினைவுகண்டு - மன்னனது எண்ணத்தை உணர்ந்து, அப்பனே பொழுது தாழ
நிற்பது என் - அப்பனே நீ காலந்தாழ்க்க நிற்பது என்னை, சினவி பேலை
போல வந்த தெவ்வை - சினந்து கடல் வடிவாக வந்த பகைமை, மான
வலிகெட - அதனது மிக்க வலிகெட, முனைய வேல் எறிந்து - கூரிய
வேற்படையை எறிந்து (வென்று), ஞாலம் முடிவு தீர்த்தி என - உலகிற்கு
வரும் அழிவை நீக்குவாய் என்று கூற எ - று.

     நனவிலுமென உம்மை விரிக்க. நினைவு - சிந்தனை செய்து தாழ்த்தல்.
கொல் : அசை. அப்பன் என்றது உவகையால்; மரபு வழுவதைதி;
துறந்தோரான பெரியார் பிறரை விளிக்குங்காற் கூறும் மரபுச் சொல்லுமாம்.
சினவி - சினந்து. வேலையன்று, வேலைபோல வந்ததொரு பகை யென்றார்.
மான வலி - மிக்க வலி, மானமும் வலியும் எனலுமாம். முனை - கூர்மை;
நுதி. முனைய : குறிப்புப் பெயரெச்சம். ஆல் : அசை. (13)

எடுத்த வேல்வ லந்தி ரித்தெ றிந்த வேலை வேன்முனை
மடுத்த வேலை சுஃறெ னவ்வ றந்து மான வலிகெட
அடுத்து வேரி வாகை யின்றி யடிவ ணங்கு தெவ்வரைக்
கடுத்த வேல்வ லான்க ணைக் காலின் மட்ட மானதே.

     (இ - ள்.) எடுத்த வேல் வலம் திரித்து எறிந்த வேலை (உடனே)
எடுத்த வேற்படையை வலமாகச் சுழற்றி வீசியபோது, வேலைமுனை
மடுத்தவேலை - வேலின் நுதியிற் பொருந்திய கடலானது, சுஃறென வறந்து
- சுஃறென்னும் ஒலியுண்டாக நீர் வற்றி, மான வலி கெட - மிக்க வலியானது
அழிய, அடுத்து - நெருங்கி, வேரி வாகையின்றி அடிவணங்கு தெவ்வரைக்
கடுத்து - மணம் பொருந்திய வெற்றி மாலை இல்லையாகத் தோல்வியுற்று
அடிகளில் வணங்கும் பகைவரைப் போன்று, அவேல் வலான் கணைக்காலின்