அவேல் வலான் கணைக்காலின்
மட்டம் ஆனது - அந்த வேற்போரில்
வல்ல உக்கிரவழுதியின் கணைக்காலின் அளவில் ஆயிற்று எ - று.
கூறியவுடன்
அவன் எறிந்த பொழுது என வருவித்துரைக்க. சுஃறென :
ஒலிக்குறிப்பு. வகரம் விரித்தல். வறந்து காலின் மட்ட மானது எனக் கூட்டுக;
வறந்து அடுத்து ஆனது எனினும் பொருந்தும். வாகை யில்லையாகத்
தோல்வி யுற்றென விரிக்க. அவ்வேல் என்பதில் வகரம் தொக்கது. ஈற்றடியில்
ஓரசைச்சீர் வந்தது. (14)
சந்த வேத வேள்வி யைத்த டுப்ப தன்றி யுலகெலாஞ்
சிந்த வேறு சூழ்ச்சி செய்த தேவர் கோவி னேவலால்
வந்த வேலை வலிய ழிந்த வஞ்ச கர்க்கு நன்றிசெய்
திந்த வேலை வலியி ழப்ப தென்று முள்ள தேகொலாம். |
(இ
- ள்.) சந்த வேத வேள்வியைத் தடுப்பது அன்றி - பண் அமைந்த
வேதத்திற் கூறிய வேள்வியைத் தடுப்பதல்லாமல், உலகு எலாம் சிந்த வேறு
சூழ்ச்சிசெய்த - உலகனைத்தும் அழியுமாறு பிறிது சூழ்ச்சி செய்த, தேவர்
கோவின் ஏவலால் - தேவேந்திரனின் ஏவலினால், வந்த வேலை வலி
அழிந்த - பெருகிவந்த கடலானது வலி யழிந்தது; வஞ்சகர்க்கு நன்றி செய்து
இந்தவேலை வலி இழப்பது என்றும் உள்ளதே கொல் - வஞ்சனையுடைய
தீயோர்க்கு உதவி செய்து அதனால் இந்தக் கடலானது தன் வலிமையை
இழப்பது எக்காலத்தும் உள்ள தொரு செயலே போலும் எ - று.
வேள்வி
தனக்கு இடையூறாயின் நேரே அதனைத் தடுத்தல் செய்யாது,
உலகினை அழியச் செய்து அதனால் வேள்வியைத் தடுத்தல் கருதியது
எத்துணையும் கொடியதொரு சூழ்ச்சியென்பார் வேறு சூழ்ச்சி செய்த
என்றார்; வேதத்திற் கூறப்பட்ட அறவினையாகிய வேள்வியைத் தடுக்கக்
கருதிய தீவினையே யன்றி உலகெலாம் அழிவெய்துமாறு சூழ்ந்த தீவினையும்
உடையானென்பதோர் பொருளும் தோன்ற நின்றது. அழிந்தது என்பது
ஈறுதொக்கது; முன் சூரபன்மன், விருத்திரன் முதலாயினார்க்கு இடங்கொடுத்து
வலியிழந்தமையின் என்று முள்ளதே போலும் என்றார். இந்த என்னும் சுட்டு
இகழ்தலைக் கருதிற்று. ஆம் : அசை. இது வேற்றுப்பொருள் வைப்பின்
பாற்படும். (15)
[அறுசீரடி யாசிரிய விருத்தம்]
|
புண்ணிடை
நுழைந்த வேலாற்
புணரியைப் புறங்கண் டோன்பால்
மண்ணிடை நின்ற சித்தர்
வானிடை மறைந்து* ஞானக்
கண்ணிடை நிறைந்து தோன்றுங்
கருணையால் வடிவங் கொண்டு
விண்ணிடை யணங்கி னோடு
விடையிடை விளங்கி நின்றார். |
(பா
- ம்.) * நிறைந்து.
|