I


58திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



குண்டு நீர்ப்படு குவளைவாய்க் கொழுஞ்சினை மரவம்
வண்டு கூப்பிடச் செம்மறூய்ப் புதுமது வார்ப்ப
அண்டர் வாய்ப்பட மறைவழி பொரிசொரிந் தானெய்
மொண்டு வாக்கிமுத் தீவினை முடிப்பவ ரனைய.

     (இ - ள்.) குண்டு நீர்ப்படு குவளைவாய் - ஆழ்ந்த சுனைநீரிலுள்ள
செங்குவணை மலரில், வண்டு கூப்பிட - வண்டுகள் ஒலிக்க, செம்மல் தூய்
- பழம்பூக்களைத் தூவி, புதுமது வார்ப்ப - புதியதேனைச் சொரி வனவாகிய,
கொழும் சினை மரவம் - கொழுவிய கிளைகளையுடைய குங்கும மரங்கள்,
அண்டர் வாய்ப்பட - தேவர்களின் வாயில் சேரும்படி, மறைவழி - மந்திர
வொலியுடன், பொரி சொரிந்து - நெற் பொரியைச் சொரிந்து. ஆன்நெய்
மொண்டுவாக்கி - பசுநெய்யை (ச்சுருவையால்) முகந்து வார்த்து, முத்தீவினை
முடிப்பவர் அனைய ன்று வகையாகிய நெருப்பையுடைய வேள்வி வினையை
முடிக்கும் முனிவர்களை ஒத்தன எ - று.

     செம்மல் - பழம்பூ. வாக்கி - வார்த்து. முத்தீ - காருகபத்தியம்,
ஆகவனீயம், தென்றிசை யங்கி என்பன. செங்குவளை, மரவம், வண்டினொலி,
பழம்பூ என்பவற்றுக்கு முத்தீ, முனிவர், மறையொலி, பொரி, நெய் என்பன
முறையே உவமங்களாம். தூவியென்பது தூய் என விகாரமாயிற்று.
முகந்தென்பது மொண்டு என மருவிற்று. (46)

அகிலு மாரமுந் தழன்மடுத் தகழ்ந்தெறிந் தழல்கால்
துகிரு மாரமுந் தொட்டெறிந் தைவனந் தூவிப்
புகரின் மால்கரி மருப்பினால் வேலிகள் போக்கி
இகலில் வான்பயி ரோம்புவ வெயினர்தஞ் சீறூர்.

     (இ - ள்.) எயினர்தஞ் சீறூர் - குறவர்களின் சீறூர்கள், அகிலும்
ஆரமும் தழல் மடுத்து - அகில் சந்த மரங்களைத் தீயினால் உண்பித்து,
அகழ்ந்து எறிந்து - (அவற்றின் வேர்களைக்) கல்லி எறிந்து, அழல்கால்
துகிரும் ஆரமும் தொட்டு எறிந்து - நெருப்புப்போலும் ஒளிவீசும்
பவளத்தையும் முத்தையும் தோண்டி வெளியில் வீசி, ஐவனம் தூவி -
மலைநெல்லை விதைத்து, புகர் இல் - குற்றமில்லாத, மால்கரி மருப்பினால்
வேலிகள் போக்கி - பெரிய யானைக் கொம்புகளால் வேலிகள் கோலி,
இகல் இல் - பகை இல்லையாம்படி, வான்பயிர் ஓம்புவ - உயர்ந்த
பயிர்களைப் பாதுகாப்பன எ - று.

     ஆரம் - சந்தனம், முத்து. சீறூர் - குறிஞ்சி நிலத்தூர். சீறூரி லுள்ளார்
அனைவரும் என்பதற்குச் சீறூர் என்றார். அகில் முதலிய விலையுயர்ந்த
பொருள்களைக் கழித்து ஐவனந்தூவி ஓம்புவ என்றது, குறவர்களின் குறிய
வாழ்க்கையைக் குறிப்பிட்டவாறு; அகில் முதலியன நெய்போல
இன்றியமையாதனவல்ல வென்பதுமாயிற்று. மலையின் வளங் கூறியதுமாயிற்று.
வருஞ்செய்யு ளிரண்டிற்கும் இங்ஙனமே கொள்க. (47)