துந்துபி யைந்து மார்ப்பப் பாரிடந் தொழுது போர்ப்பத்
தந்திர வேத கீதந் ததும்பியெண் டிசையுந் தாக்க
அந்தர நாட ரேத்த வகம்விசும் பாற தாக
வந்துதன் கோயில் புக்கான் வரவுபோக் கிறந்த வள்ளல். |
(இ
- ள்.) வரவு போக்கு இறந்த வள்ளல் - பிறப் பிறப்பில்லாத
இறைவன், துந்துபி ஐந்தும் ஆர்ப்ப - ஐந்து துந்துபிகளும் முழங்கவும்,
பாரிடம் தொழுது போர்ப்ப - பூதகணங்கள் வணங்கிச் சூழவும், கீதம்
தந்திரம் வேதம் ததும்பி எண் திசையும் தாக்க - கீதத்தோடு கூடிய
சிவாகமங்களும் வேதங்களும் நிறைந்து எட்டுத் திக்கிலும் ஒலிக்கவும்,
அநத்ர நாடர் ஏத்த - வான நாடர்கள் துதிக்கவும், அகல் விசும்பு ஆறதாக
வந்து தன் கோயில் புக்கான் - அகன்ற வான்வழியாக வந்து தனது
திருக்கோயிலுட் புகுந்தருளினான் எ - று.
(தந்திரம்
- நூல்; ஆகமம். தாக்க - நிறைய. ஆறது, அது :
பகுதிப்பொருள் விகுதி. வரவு போக்கு என்பன பிறப்பிறப்பைக் குறிப்பன;
"போக்கும் வரவும்
புணர்வுமிலாப் புண்ணியனே" |
என்பது திருவாசகம்;
எங்கும் நிறைந்த பொருளென்னும் உண்மைத் தன்மை
கருதிக் கூறிற்றுமாம். (18)
அஞ்சலி முகிழ்த்துச் சேவித் தருகுற வந்த வேந்தன்
இஞ்சிசூழ் கோயி லெய்தி யிறைஞ்சினன் விடைகொண் டேகிப்
பஞ்சின்மெல் லடியா ரட்ட மங்கலம் பரிப்ப நோக்கி
மஞ்சிவர் குடுமி மாட மாளிகை புகுந்தான் மன்னோ. |
(இ
- ள்.) அஞ்சலி முகிழ்த்து சேவித்து அருகுற வந்த வேந்தன் -
அஞ்சலி கூப்பித் தொழுது அருகிலே வந்த பாண்டிய மன்னன், இஞ்சி சூழ்
கோயில் எய்தி இறைஞ்சினன் - மதில் சூழ்ந்த திருக்கோயிலையடைந்து
வணங்கி, விடை கொண்டு ஏகி - (அவரிடம்) விடைபெற்றுச் சென்று,
பஞ்சின்மெல் அடியார் - பஞ்சினும் மெல்லிய அடிகளையுடைய மகளிர்,
அட்ட மங்கலம் பரிப்ப நோக்கி - எட்டு மங்கலங்களையும் தாங்கி எதிர்வரப்
பார்த்து, மஞ்சு இவர் குடுமி மாட மாளிகை புகுந்தான் - மேகந் தவழும்
சிகரத்தையும் மேன் மாடத்தையு முடைய மாளிகையிற் புகுந்தான் எ - று.
(இறைஞ்சினன்
: முற்றெச்சம். செம்பஞ்சி யூட்டிய அடியென்னலுமாம்.
மன்னும் ஓவும் அசைகள். (19)
வளையெயின் மதுரை மூதூர் மறிகட லிவற்றி னாப்பண்
விளைவய னகர மெல்லாம் வெள்ளியம் பலத்து ளாடுந்
தளையவிழ் கொன்றை வேணித் தம்பிரான் றனக்கே சேர்த்துக்
களைகணா யுலகுக் கெல்லா மிருந்தனன் காவல் வேந்தன். |
(இ
- ள்.) வளை எயில் மதுரை மூதூர் மறி கடல் இவற்றின் நாப்பண்
- வளைந்த மதில் சூழ்ந்த மதுரையாகிய தொன்மையுடைய நகரமும்
|