மந்தரங் காசி யாதிப் பதிகளில்* வதிந்து நோற்கத்
தந்திடும் பயனிற் கோடி தழைத்திடு மதுரை தன்னில்
இந்தநல் விரத நோற்போர்க் கதிகம்யா தென்னிற் சோம
சுந்தர னுரிய வார மாதலாற் சோம வாரம். |
(இ
- ள்.) மந்தரம் காசி ஆதி பதிகளில் - மந்தரம் காசி முதலிய
திருப்பதிகளில், வதிந்து நோற்கத் தந்திடும் பயனில் - இருந்துஅனும்டிக்கத்
தருகின்ற பயனிலும், இந்த நல்விரதம் மதுரை தன்னில் நோற்போர்க்கு -
இந்த நல்ல விரதத்தை மதுரைப்பதியில் இருந்து நோற்பவர்களுக்கு, கோடி
தழைத்திடும் - கோடி பங்கு பயன்மிகும்; அதிகம் யாதென்னில் - அங்ஙனம்
மிகுதற்குக் காரணம் யாதென்றால், சோமவாரம் சோமசுந்தரன் உரிய வாரம்
ஆதலால் - சோமவார மானது சோமசுந்தரக் கடவுளக்கு உரிய வாரம்
ஆகையால் எ - று.
நோற்போர்க்குக்
கோடிமடங்கு பயன் மிகும் என்க. சோமவாரம்
சோமசந்தரக் கடவுளுக்கு உரியதாகலானும், அவ்விறைவன் எழுந்தருளி
யிருப்பது மதுரையிலாகலானும் மிகுமென்றார். (7)
அங்கதி னதிகப்பேறுண் டருக்கனின் மதிதோய்ந் தொன்றித்
தங்கிய திங்க ணோன்பு தகுதியி னோற்க வல்லார்க்
கிங்கதி னதிக நீதி யீட்டிய பொருள்கொண் டாற்றும்
மங்கர விரதப் பேறொன் றனந்தமாய் வளரு மன்றே. |
(இ
- ள்.) அங்கு -அம் மதுரைப்பதியில், அருக்கனீன்மதி தோய்ந்து
ஒன்றித் தங்கிய திங்கள் நோன்பு - சூரியனோடு சந்திரன் பொருந்த
அந்நாளுடன் கூடிய சோமவார விரதத்தை, தகுதியில் நோற்க வல்லார்க்கு
- விதிப்படி நோற்க வல்லவர்க்கு, அதின் அதிகப் பேறு உண்டு -
அப்பயனிலும் அதிகப்பயன் உண்டு; இங்கு - இப்பதியில், நீதி ஈட்டிய
பொருள் கொண்டு ஆற்றும் - நீதிவழியாக ஈட்டிய பொருளினால் இயற்றும்,
மங்கல விரதப்பேறு - நன்மையாகிய அவ்விரதப் பயன், அதின் அதிகம்
ஒன்று அனந்தமாய் வளரும் - அதனிலும் அதிக முடையதாய் ஒன்று
பலவாகப் பெருகும் எ - று.
அதனின்
என்பது அதின் என விகார மாயிற்று. அருக்கனுடன் மதி
கூடிய நாள் அமாவாசை; தலையுவா. ஒன்றியென்பதனை ஒன்றவெனத் திரிக்க.
தோய்ந் தொன்றல் : ஒருபொருளன. அவ்விரதப் பேறு அதிகமாய்
அனந்தமாய் வளருமென்க. அன்று, ஏ : அசைகள். (8)
நலமலி விரத நோற்கத் தொடங்குநா ணவில்வாந் தேளிற்
சிலையினி லாத லன்றி யிரட்டிய தெரிசஞ் சேர்ந்த
மலமதி யொழித்து மற்றை மதியிலு முந்தைப் பக்கத்
தலர்கதிர் வாரத் தல்லூ ணயின்றிடா தயலிற் றுஞ்சா. |
(இ
- ள்.) நலம் மலி விரதம் நோற்கத் தொடங்கும் நாள் நவில் வாம்
- நன்மை நிறைந்த அச்சோமவார விரதத்தின் நோற்பதற்குத் தொடங்குகின்ற
(பா
- ம்.) * காசி யாதி பதிகளில்.
|