I


இந்திரன் முடிமேல் வளையெறிந்த படலம்587



நாளைக் கூறுதும்; தேளில் சிலையினில் ஆதல் - கார்த்திகை மாதத்திலாவது
மார்கழி மாதத்திலாவது, அன்றி - அல்லாமல், இரட்டிய தெரிசம் சேர்ந்த
மலமதி ஒழித்து - இரண்டு அமாவாசை சேர்ந்த மலமாதங்களை நீக்கி, மற்றை
மதியிலும் - மற்றைய மாதங்களிலாவது, முந்தை பக்கத்து - முற்பக்கத்தில்,
அலர் கதிர் வாரத்து - பரந்த கிரணத்தையுடைய ஞாயிற்றுக்கிழமையின், அல்
- இரவில், ஊண் அயின்றிடாது - உணவு கொள்ளாது, அயலின் துஞ்சா -
வேற்றிடத்தில் துயின்று எ - று.

     தேள் - விருச்சிகம் : சிலை - தனுசு; இவ்விராசிகளில் ஆதித்தன்
இருக்கும் கார்த்திகை மார்கழி மாதங்களென்க. இரட்டிய தெரிசம் -
இரண்டாகிய அமாவாசை. மலமதி - குற்ற முடைய மாதம். முந்தைப் பக்கம்
- பூர்வ பக்கம்; சுக்கில பட்சம். ஆயின்றிடா : ஈறுகெட்ட எதிர்மறை
வினையெச்சம். துஞ்சா : அயலிற்றுஞ்சி என்றார்; மனைவியுடன் துயிலாம
லென்பது கருத்து. வேறிடத்தில் துயிலாமல் என்று பொருளுரைப்பாருமுளர்.
(9)

வைகறை யெழுந்து சேற்கண்ண மணாளனை யுள்கி யற்றைச்
செய்கட னிறீஇக்கா மாதி சிந்தைநீத் தலர்பொற் கஞ்சப்
பொய்கையை யடைந்து கையிற் பவித்திரம் புனைந்து வாக்கு
மெய்கருத் தொருப்பா டெய்தச் சங்கற்பம் விதந்து கூறி.

     (இ - ள்.) வைகறை எழுந்து - விடியற் காலையில் எழுந்து, சேல்கண்
மணாளனை உள்கி - அங்கயற்கண்ணம்மையின் மணாளாராகிய சோமசுந்தரக்
கடவுளைச் சிந்தித்து, அற்றைச் செய்கடன் நிறீஇ - அன்று செய்ய வேண்டிய
கடன்களைச் செய்து முடித்து, காமாதி சிந்தை நீத்து - காம முதலிய
குற்றங்களை மனத்தினின்றும் நீக்கி, அலர் பொன் கஞ்சப் பொய்கையை
அடைந்து - மலர்ந்த பொற்றாமரை வாவியை அடைந்து, கையில் பவித்திரம்
புனைந்து - விரலில் பவித்திரம் தரித்து, வாக்கு மெய் கருத்து ஒருப்பாடு
எய்த - உரையும் உடலும் உள்ளமும் ஒன்றுபட, சங்கற்பம் விதந்து கூறி -
சங்கற்பம் சிறந்தெடுத்துச் சொல்லி எ - று.

     பரிதி யுதித்தற்கு ஐந்துநாழகையின் முன் எழுந்தென்க. சேற் கண்ணி
யென்பது சேற்கண் என நின்றது. பிராட்டியுனுஞ் சிந்திக்க வேண்டுமென்பது
தோன்றச் ‘சேற்கண் மணாளனை’ என்றார். காமாதி - காமம் வெகுளி
மயக்கம்; அறுவகைக் குற்றமுமாம். ஒருப்பாடு - ஒன்று கடல் : தொழிற்
பெயர். விதந்து கூறல் - சிறப்பு வகையாற் கூறல். (10)

கடம்படி முளைத்த முக்கட் கரும்பினை நினைந்து ஞாலத்
திடம்படு தீர்த்த மெல்லா மாடிய பயனை யீண்டுத்
திடம்படத் தருதி யென்னாத் திரைத்தடம் படிந்து வெண்ணீ
றுடம்பணிந் தக்க மாலை யொளிபெற விதியாற் றாங்கி.

     (இ - ள்.) கடம்பு அடி முளைத்த முக்கண் கரும்பினை - கடப்ப
மரத்தின் அடியிலே தோன்றிய மூன்று கண்களையுடைய கரும்பு போன்ற