I


588திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



சோமசுந்தரக் கடவுளை, நினைந்து - சிந்தித்து, ஞாலத்து இடம் படு தீர்த்தம்
எல்லாம் - நிலவுலகிற் பொருந்திய தீர்த்தங்கள் எல்லாவற்றிலும், ஆடிய
பயனை - மூழ்கிய பயனை, ஈண்டு திடம்படத் தருதி என்னா - இங்கு உறுதி
பெறத் தருவாயாக என்று வேண்டி, திரைத்தடம் படிந்து - அலைகளையுடைய
பொற்றாமரையில் நீராடி, வெள் நீறு உடம்பு அணிந்து - வெள்ளிய திருநீற்றை உடம்பில் தரித்து, அக்கமாலை ஒளிபெற விதியால் தாங்கி - உருத்திராக்க மாலையை ஒளியுண்டாக விதிப்படி தாங்கி எ - று.

     கண் - விழி, கணு. இறைவனைக் கரும்பென்றவர் இக்கரும்பு
கடம்படியில் முளைத்ததென்றும், மூன்று கண்ணினையுடையதென்றும்
நயந்தோன்றக் கூறினார். முன்னரும் இங்ஙனங் கூறியிருத்தல்காண்க;

"கண்கள்மூன் றுடையதோர் கரும்பே"

என்பது திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா;

     இறைவனை "ஞானக்கரும்பின் றெளி" என்றார் மாணிக்கவாசகப்
பெருமா
னார். படுதீர்த்தம் - உண்டாகிய தீர்த்தம்; இடம்படு எனப் பிரித்து
மிக்கவாகிய என்றுரைத்தலுமாம். விதியால் என்பதனை வெண்ணீறணிந்
தென்பதனோடும் கூட்டலுமாம். ஒளி - ஞானமுமாம். (11)

வெள்ளைமந் தார முல்லை மல்லிகை வெடிவாய்ச் சாதி
கள்ளவிழ் மயிலை யாதி வெண்மலர் கவர்ந்து வேழப்
பிள்ளையை முந்தப் பூசித் திரந்துசங் கற்பம் பேசி
உள்ளணைந் துச்சி மேற்பன் னிருவர லுயர்ச்சிக் கும்பர்.

     (இ - ள்.) வெள்ளைமந்தாரம் முல்லை மல்லிகை வெடிவாய் சாதி -
வெள்ளைமந்தாரை மலரும் முல்லை மலரும் மல்லிகை மலரும் வெடித்த
வாயையுடைய சாதி மலரும், கள் அவிழ் மயிலை ஆதி வெண்மலர் கவர்ந்து
- தேனொடு மலர்ந்த இருவாட்சி மலரும் முதலிய வெள்ளை மலர்களை
எடுத்து, வேழப்பிள்ளையை முந்தப்பூசித்து - சித்தி விநாயகக் கடவுளை
முன்னே வழிபட்டு, இரந்து - குறை யிரந்து, சங்கற்பம் பேசி - சங்கற்பங்
கூறி, உள் அணைந்து - உள்ளே சென்று, உச்சி மேல் பன்னிரு விரல்
உயர்ச்சிக்கு உம்பர் - முடியின்மேல் பன்னிரண்டு அங்குல அளவின்
உயர்ச்சிக்குமேல் எ - று.

     வெடித்தல் - மலர்தல். பன்னிரு விலல் உச்சிக்குமேல் - துவாத
சாந்தத்தில். (12)

சத்திய ஞானா னந்த தத்துவந் தன்னை யுள்கி
வைத்ததன் வடிவங் கொண்டு மண்முதற் சிவமீ றான
அத்துவ விலிங்கந் தன்னை யாசன மூர்த்தி மூல
வித்தைமற் றாலு நூலின் விதியினாற் பூசை செய்க.

     (இ - ள்.) சத்திய ஞான ஆனந்த தத்துவம் தன்னை உள்கி வைத்து -
உண்மையறிவானந்த வடிவாகிய சோமசுந்தரக் கடவுளைச் சிந்தித்து வைத்து,
அதன் வடிவம் கொண்டு - அச்சிவ வடிவாயிருந்து, மண் முதல் சிவம் ஈறு