ஆன அத்துவ இலிங்கம்
தன்னை - மண்முதலாகச் சிவம் ஈறாக வுள்ள
தத்துவாத்துவாவின் வடிவமான சிவலிங்கப் பெருமானை, ஆசனம் மூர்த்தி
மூல வித்தை மற்றாலும் - ஆசனமும் மூர்த்தியும் மூலமும் முதலிய
மந்திரங்களாலும். நூலின் விதியினால் - ஆகம விதிப்படி, பீசை செய்க -
பூசிக்க எ - று.
சச்சிதானந்தமாகிய
தத்துவத்தை யென்க; தத்துவம் - மெய்ப் பொருள்.
உள்கி வடிவங் கொண்டு என்பது அந்தரியாக மென்னும் அகப் பூசையை
யுணர்த்திற்று. மண் முதல் சிவம் ஈறாகவுள்ள தத்துவம் முப்பத்தாறும்
தத்துவாத்துவா எனப்படும்; இஃது ஆறு அத்துவாக்களுள் ஒன்று; அத்துவா
- வழி; சிவலிங்கத்தின் அடியில் ஆன்ம தத்துவமான அயன் பாகமும்,
நடுவில் வித்தியா தத்துவமான திருமால் பாகமும், முடியில் சிவ தத்துவமான
உருத்திரன் பாகமும் தோன்றும் (உள்ளன) என்று வேதத்துக்குப்
பொருளருளிச் செய்த படலத்திற் கூறப் பெற்றுள்ளது. ஆசனமந்திர மூர்த்தி
மந்திர மூலமந்திரங்களாலும் பிறவற்றாலு மென்க. வித்தை - மந்திரம். (13)
ஐந்தமு தாவி னைந்து நறுங்கனி யைந்து செந்தேன்
சந்தன தோயம் புட்பத் தண்புனன் மணிநீ ராட்டிச்
சுந்தர வெண்பட் டாடை கருப்புரச் சுண்ணஞ் சாந்தங்
கந்தமல் லிகைமுன் னான வெண்மலர்க் கண்ணி சாத்தி. |
(இ
- ள்.) ஐந்து அமுது - பஞ்சாமிர்தமும், ஆவின் ஐந்து - பஞ்ச
கவ்வியமும், நறுங்கனி ஐந்து - நறிய கனிகள் ஐந்தும், செந்தேன் - சிவந்த
தேனும், சந்தன தோயம் - சந்தனக் குழம்பும், புட்பத் தண் புனல் - மலர்
பெய்த குளிர்ந்த நீரும், மணிநீர் - தூய நீருமாகிய இவைகளால், ஆட்டி -
திருமஞ்சனஞ் செய்து, சுந்தர வெண் பட்டாடை - அழகிய வெண்
பட்டாடையும், கருப்புரச் சுண்ணம் - பச்சைக் கர்ப்பூரச் சுண்ணமும், சந்தம்
- சந்தனமும், கந்த மல்லிகை முன் ஆன வெண்மலர்க் கண்ணி - மணம்
பொருந்திய மல்லிகை முதலான வெள்ளிய மலராலாகிய மாலையும், சாத்தி
- அணிந்து எ - று.
ஐந்தமுது
முதலியன முற்கூறப்பட்டன, தோயம் - நீர்; சந்தன தோயம்
- சந்தனத்துடன் கலந்த நீத்; சந்தனச் சேறு. புட்பத் தண்புனல் - பனிநீருமாம். கண்ணி
- இண்டை முதலியன. (14)
காசணி பொலம்பூண் சாத்திக் கனைகழ லாதி யங்க
பூசனை செய்து சேற்கட் பூரண பரையை யவ்வா
றீசனைந் தெழுத்தைப் பெண்பாற் கிசையவுச் சரிததுப் பூசித்
தாசறு சுரபித் தீப்பா லட்டவின் னமுதி னோடும். |
(இ
- ள்.) காசு அணி பொலம் பூண் சாத்தி - மணிகள் இழைத்த
பொன்னாலாகிய திருவாபரணஞ் சாத்தி, கனைகழல் ஆதி அங்க பூசனை
செய்து - ஒலிக்கின்ற வீரகண்டை யணிந்த திருவடி முதலாகத் திருவங்
கங்களைப் பூசித்து, சேல் கண் பூரண பரையை - கயல்போலுங்
கண்ணினையுடைய எங்கும் நிறைந்த பராசக்தியை, அவ்வாறு - அவ்வாறே,
ஈசன் ஐந்து எழுத்தைப் பெண்பாற்கு இசைய உச்சரித்துப் பூசித்து -
|