அண்ட வாணருக் கின்னமு தருத்துவோர் வேள்விக்
குண்ட வாரழற் கொழும்புகை கோலுமக் குன்றிற்
புண்ட வாதவே லிறவுளர் புனத்தெரி மடுப்ப
உண்ட காரகிற் றூமமு மொக்கவே மயங்கும். |
(இ
- ள்.) அண்டவாணருக்கு - தேவர்களுக்கு, இன் அமுது
அருத்துவோர் - இனிய அவியுணவை உண்பிக்கும் முனிவரின், வேள்
விக்குண்ட ஆர்அழல் கொழும்புகை - வேள்விக் குண்டத்தில் நிறைந்த
தீயினின்று மேலெழும். கொழுவிய புகையானது, கோலும் அக்குன்றில் -
சூழும் அப்பொதியின்மலையில், புண் தவாத வேல் இறவுளர் - புலால்
நீங்காத வேலினையுடைய குறவர்கள், புனத்து எரிமடுப்ப - காட்டில்
தீயைமூட்ட, உண்ட கார் அகில் தூமமும் - அதனால் உண்ணப்படு கரிய
அகிலின் புகையும், ஒக்கவே மயங்கும் - அவ்வேள்விப் புகையின்
உடனாகவே மயங்கா நிற்கும் எ - று.
வாழ்நர்
என்பது வாணர் என மருவிற்று. கொலைத்தொழி
லுடையாரென்பார் புண்ட வாதவே லிறவுளர் என்றார். தவாத தாவாத
என்பதன் விகாரம்; தபு கன்னும் பகுதி திரிந்து முடிந்ததுமாம். சுட்டு,
வருவிக்கப்பட்டது. இடையடியாகப் பிறந்த ஓக்க வென்னும் வினையெச்சம்
உடன் என்னும் பொருட்டு. (48)
கருவி வான்சொரி மணிகளுங் கழைசொரி மணியும்
அருவி கான்றபன் மணிகளு மகன்றலை நாகத்
திரவி கான்றசெம் மணிகளும் புனங்கவ ரினமான்
குருவி வீழ்ந்திடக் கொடிச்சியர் கோத்தெறி கவண்கல். |
(இ
- ள்.) கருவி வான் சொரி மணிகளும் - தொகுதியையுடைய
மேகங்கள் சொரிந்த முத்துக்களும், கழைசொரி மணியும் - மூங்கில்கள்
சொரிந்த முத்துக்களும், அருவிகான்ற பன்மணிகளும். அருவிகள் ஒதுக்கிய
பல்வகை மணிகளும், அகன்தலை நாகத்து - அகன்ற படத்தினையுடைய
நாகத்தினின்றும், கான்ற - உமிழப்பட்ட, இரவி செம்மணிகளும் -
சூரியன்போலும் சிவந்த மணிகளும், புனம் கவர் இனம்மான் குருவி வீழ்ந்திட
- தினைப்புனத்தின் கதிர்களைக் கவர்கின்ற கூட்டமாகிய மான்களும்
குருவிகளும் வீழும்படி, கொடிச்சியர் கவண்கோத்து எறிகல் - குறமகளிர்
கவணில்கோத்து எறிகின்ற கற்களாவன எ - று.
கருவி
- தொகுதி; கருவிதொகுதி என்னும் தொல்காப்பியச்
சூத்திரவுரையில், கருவிவான மென்புழிக் கருவி, மின்னு முழக்கு
முதலாயவற்றது தொகுதி எனச் சேனாவரையர் எழுதியிருப்பது இங்கே
அறியற்பாலது. நாகத்து என்பதில் இன் உருபு தொக்கது. புனம் என்றது
புனத்திலுள்ள கதிர்களை உணர்த்திற்று. மான் குருவி, எண்ணும்மை
தொக்கன. கொடிச்சியர் - குறிஞ்சிநில மகளிர். (49)
மாய வன்வடி வாயது வைய மாலுந்திச்
சேய பங்கய மாயது தென்னனா டலர்மேற்
போய மென்பொகுட் டாயது பொதியமப் பொகுட்டின்
மேய நான்முக னகத்தியன் முத்தமிழ் வேதம். |
|