I


இந்திரன் முடிமேல் வளையெறிந்த படலம்591



மடங்கிதழ் சுருங்கல் வாடி யுலர்ந்தது மயிர்ச்சிக் குண்டல்
முடங்குகாற் சிலம்பிக் கூடு புழுக்கடி முதலாங் குற்றம்
அடங்கினுங் குற்ற மில்லை* யுத்தம மாகும் வில்வந்
தடங்கை கொண்டீச னாம மாயிரஞ் சாற்றிச் சாத்தல்.

     (இ - ள்.) மடங்கு இதழ் சுருங்கல் - இதழ் மடங்கிச் சுருங்கி
யிருத்தலும், வாடி உலர்ந்தது - வாடிக் காய்ந்திருத்தலும், மயிர்ச்சிக்குண்டல்
- மயிர்ச் சிக்குண்டிருத்தலும், முடங்குகால் சிலம்பிக் கூடு - வளைந்த
கால்களையுடைய சிலம்பிப்பூச்சி கூடுகட்டியிருத்தலும், புழுக்கடி - புழுக்கள்
கடித்திருத்தலும், முதலாம் குற்றம் அடங்கினும் குற்றம் இல்லை - முதலிய
குற்றங்கள் அடங்கியிருந்தாலும் குற்ற மாகா; வில்வம் உத்தமம் ஆகும் -
வில்வஞ் சிறந்ததாகும்; தடங்கை கொண்டு - நீண்டகையில் அதனைக்
கொண்டு, ஈசன் ஆயிரம் நாமம் சாற்றிச் சாத்தல் - சிவபெருமானுடைய
ஆயிரந் திருநாமங்களையுங் சுறி அருச்சிக்க எ - று.

     இதழ சுருங்கல் முதலியன குற்றமேனும் வில்வத்திற்காயின் அவை
குற்றமாகா என வில்வத்தின் பெருமை கூறியவாறு. சாத்தல் : வியங்கோள்.
(18)

அடியனேன் செய்யுங் குற்ற மன்றைக்கண் றனந்த மாகுங்
கொடியநஞ் சமுதாக் கொண்டாய் குற்றமுங் குணமாக் கொண்டு
படியெழு தரிய நங்கை பங்கனே காத்தி யென்று
முடியுற வடியில் வீழ்ந்து மும்முறை வலஞ்செய் தேத்தி.

     (இ - ள்.) படி எழுதரிய நங்கை பங்கனே - ஒப்பெழுதலாகாத
உமையை ஒரு பாகத்தி லுடையவனே, அடியனேன் செய்யும் குற்றம்
அன்றைக்கு அன்று அனந்தம் ஆகும் - அடியேன் செய்கின்ற குற்றங்கள்
ஒவ்வொருநாளும் எண்ணிறந்தனவாம்; கொடிய நஞ்சு அமுதாக் கொண்டாய்
- கொடிய நஞ்சினையும் அமுதாகக் கொண்ட நீ, குற்றமும் குணமாக்
கொண்டு காத்தி என்று - யான் செய்யும் குற்றங்களையும் குணமாகக்
கொண்டு காத்தருள்வாய் என்று வேண்டி, அடியில் முடி உற வீழ்ந்து -
திருவடியில் முடி பொருந்துமாறு வீழ்ந்து வணங்கி, மும்முறை வலம் செய்து
ஏத்தி - மூன்றுமுறை வலஞ்செய்து துதித்து எ - று.

     அன்றைக்கன்று - அன்றன்று; ஒவ்வொரு நாளும். குற்றமுங் குணமாகக்
கொண்டு என்பது.

"குன்றே யனைய குற்றங்கள் குணமா மென்றே நீ கொண்டால்"

என்னும் திருவாசகத்தை நினைப்பிக்கின்றது. குற்றமும் குணமாக்
கொள்ளுதற்கு உரியை யென்பார் ‘கொடிய நஞ்சமுதாக் கொண்டாய்’
என்றார்; இது கருத்துடையடைகொளியணி. படி - ஒப்பு;

"படியெடுத் துரைத்துக் காட்டும் படித்தன்று படிவம்"

     (பா - ம்.) * முதலவான அடங்கலுங் குற்றமேயாம்.
(இராமசுவாமிப் பிள்ளை)