I


592திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



என்பது இராமாயணம். படிவம் என்பது ஈறு தொக்க தென்னலுமாம்.
அங்ஙனம் அருச்சித்துக் காத்தி யென்று வீழ்ந்து வலஞ்செய்து ஏத்தி என
மேலைச் செய்யுளோடியைத்துரைக்க. (19)

வன்மனங் கரைய நின்று வேண்டிய வரங்கள் வேண்ட
நன்மணப் பேறு மக்கட் பேறுநல் வாக்குக் கல்வி
பொன்மனக் கினிய போகந் தெவ்வரைப் புறகு காண்டல்
இம்மையி லரசு மற்று மெண்ணியாங் கெய்து மன்னோ.

     (இ - ள்.) வல் மனம் கரைய நின்று வேண்டிய வரங்கள் வேண்ட
- வலிய மனமானது கரைந்துருக நின்று வேண்டிய வரங்களைக்
கூறிக்குறையிரக்க, நல்மணப் பேறு - நல்ல கல்யாணப் போறும், மக்கள்
பேறு - நன் மக்கட்பேறும், நல்வாக்கு கல்வி பொன் - நல்ல வாக்கும்
கல்வியும் பொருளும், மனக்கு இனிய போகம் - மனதிற்கு இனிய போகமும்,
தெவ்வரைப் புறகு காண்டல் - பகைவரைப் புறங்காணுதலும், இம்மையில்
அரசும் மற்றும் - இப்பிறப்பிலே அரசுரிமையும் பிறநலங்களும், எண்ணியாங்கு
எய்தும் - எண்ணியவாறே உண்டாகும் எ - று
.

"இருப்பு நெஞ்ச வஞ்ச னேனை யாண்டு கொண்ட நின்னதாள்"
"வன்னெஞ்சக் கள்வன் மனவலிய னென்னாதே
கன்னெஞ் சுருக்கிக் கருணையினா லாண்டு கொண்ட"
 
"அனபினா லடியே னாவியோ டாக்கை யானந்த மாய்க்கசிந்
துருக"
 

"அரைசனே யன்பர்க் கடியனே னுடைய வப்பனே யாவியோ
டாக்கை, புரைபுரை கனியப் புகுந்து நின்றுருக்கி"

என்னும் திருவாசகங்கள் இங்கே சிந்திக்கற்பாலன. மணமாகிய பேறும்
மக்களாகிய பேறும் என்க. மனக்கு : அத்துச் சாரியை தொக்கது. மன்னும்
ஓவும் அசைகள். (20)

ஆதியிவ் விலிங்கந் தீண்டற் கருகரல் லாத வேத
வேதியர் முதலோ ரிட்ட விலிங்கத்திவ் விதியா லர்ச்சித்
தோரிய விரத நோற்க வர்ச்சனைக் குரிய ரல்லாச்
சாரியர் பொருணேர்ந் தாரி சைவராற் பூசை செய்தல்.

     (இ - ள்.) ஆதி இவ்விலிங்கம் தீண்டற்கு - முதன்மையான இச்
சொக்கலிங்கப் பெருமானைத் தொட்டுப் பூசித்தற்கு, அருகர் அல்லாத வேத
வேதியர் முதலோர் - உரியரல்லாத வேதம் உணர்ந்த வேதியர் முதலோார்,
இட்ட இலிங்கத்து - ஆன்மார்த்த இலிங்கத்தின்கண், இவ் விதியால்
அர்ச்சித்து - இம் முறைப்படி வழிபட்டு, ஓதியவிரதம் நோற்கு - மேலே
கூறிய சோமவார விரதம் நோற்கக் கடவர்; அர்ச்சனைக்கு உரியர் அல்லாச்
சாதியர் - அவ்வான்மார்த்த பூசனைக்கு உரிமையளிக்கப்படாத சாரியார்,
பொருள் நேர்ந்து ஆதி சைவரால் பூசை செய்தல் - பொருள் கொடுத்து
ஆதி சைவராற் பூசித்து நோற்கக்கடவர் எ - று.