I


இந்திரன் முடிமேல் வளையெறிந்த படலம்593



திருக்கோயில்களில் சிவலிங்கத்தைத் தொட்டுப் பூசித்தற்குரியார் ஆதி
சைவரே யென்பதும் வைதிகப் பிராமணர் முதலிய ஏனையோர்
உரியரல்லரென்பதும் சிவகாமநூற் கொள்கை;

"முப்பொழுதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்"

என்னும் ஆளுடையநம்பிகள் விதந்தோதுதலுங காண்க. செய்தல் :
வியங்கோள். இவ் விரதம் நோற்கக் கடவர் என வருவித்துரைக்கப்பட்டது.
(21)

[எழுசீரடி யாசிரிய விருத்தம்]
பொருவிலிவ் விரத மைவகைத் துச்சிப்
     போதிலு னிரவிலூ ணிரண்டும்
ஒருவுத லுறங்கா திருத்தலர்ச் சனைநால்
     யாமமு முஞற்றுத லென்னக்
கருதினிவ் வைந்து மொன்றினுக் கொன்று
     கழியவு மதிகமா நோற்கும்
வருடமொன் றிரண்டு மூன்றுபன் னிரண்டு
     வருடம்வாழ் நாளள விவற்றுள்.

     (இ - ள்.) உச்சிப்போதில் ஊண் - உச்சிப் பொழுதில் உண்ணுதலும்,
இரவில் ஊண் - இரவிலுண்ணுதலும், இரண்டும் ஒருவுதல் - இரண்டு வேளை
உணவையும் நீக்குதலும், உறங்காது இருத்தல் - துயிலாதிருத்தலும், நால்
யாமமும் அர்ச்சனை உஞற்றுதல் என்ன - நான்கு சாமமும் அருச்சனை
புரிதலும் என்று , பொருவு இல் இவ் விரதம் ஐவகைத்து - ஒப்பற்ற
இவ்விரதமானது ஐந்து வகையினை யுடையது; கருதின் - ஆராய்ந்து
பார்க்கின், இவ்வைந்தும் - இவ்வைந்து வகையும், ஒன்று மிகவுஞ்
சிறந்ததாகும்; நோற்கும் வருடம் - நோற்கும் ஆண்டின் அளவு, ஒன்று
இரண்டு மூன்று பன்னிரண்டு வருடம் வாழ் நாள் அளவு - ஒன்றும
இரண்டும் மூன்றும் பன்னிரண்டும் ஆகிய ஆண்டினளவும் வாழ் நாளளவும்
ஆகும்; இவற்றுள் - இவற்றினுள் எ - று.

     உச்சிப் போதில் உண்டு இரவில் நீக்கலும், இரவில் உண்டு
உச்சிப்போதில் நீக்கலும் என்க. உறங்காதிருத்தல் அர்ச்சனை இவற்றுடன்
ஊணொருவுதலையுஞ் சேர்த்துக் கொள்க. ஒன்றினுக்கொன்று ஒன்றினொன்று :
வேற்றுமை மயக்கம். (22)

உடலள வெண்ணி நோற்பவர் முந்த
     வுந்தியா பனஞ் செய்து நோற்கக்
கடவரவ் வருடக் கட்டளைக் கிறுதி
     கழிப்பதுத் தாபன விதிதான்
மடலவிழ் மாலை மண்டபங் குண்ட
     மண்டலம் வகுத்துமா பதியைப்
படரொளி வெள்ளி முப்பது கழஞ்சிற்
     படிமையா னிருமிதஞ் செய்து.