I


594திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



     (இ - ள்.) உடல் அளவு எண்ணி நோற்பவர் - வாழ் நாளளவு கருதி
நோற்கின்றவர் (தமக்கு உத்தியாபனம் இல்லை யாகலின்), முந்த
உத்தியாபனம் செய்து நோற்கக் கடவர் - முதலில் அவ்விரதம் பூர்த்தி
யாதற்காக முன் செய்யும் கிரியையைச் செய்து நோற்கங்க கடவர்; அவ்வருடக் கட்டளைக்கு - மேற்கூறிய அவ்வாண்டுகளினளவில் நோற்கும் விரதத்திற்கு,
இறுதி கழிப்பது - (உத்தியாபனம்) முடிவிற் செய்ய தக்கதாகும்; உத்தாபன
விதி - அவ்வுத்தியாபன விதியாவது, மடல் அவிழ மாலை மண்டபம் - இதழ்
விரிந்த மாலை நாற்றிய மண்டபமும், குண்டம் மண்டலம் வகுத்து -
குண்டமும் மண்டலமும் வகுத்து, உமா பதியை உமை கேள்வனாகிய
சிவபெருமானை, படர் ஒளி வெள்ளி முப்பது கழஞ்சில் படிமை நிருமிதம்
செய்து - பரந்த ஒளியையுடைய முப்பது கழஞ்சு வெள்ளியினால் திருவுருவம்
அமைத்து எ - று.

     உத்தியாபனம் - குறித்த ஆண்டுவரை விரதம் நோற்று முடிக்கும்
பொழுது செய்யுஞ் சடங்கு; இஃது உத்தாபனம் எனவும் திரிந்தது. தான்,
ஆல் . அசைகள். (23)

காலையி லாசான் சொல்வழி நித்தக்
     கடன்முடித் துச்சி தொட் டந்தி
மாலையி னளவும் புராணநூல் கேட்டு
     மாலைதொட் டியாமமோர் நான்குஞ்
சேலன கண்ணாள் பங்களைப் பூசை
     செய்கவப் பூசனை முடிவின்
மூலமஙந திரநூஙற றெட்டுநூற் றெட்டு
     முறையினா லாகுதி முடித்தல்.

     (இ - ள்.) காலையில் ஆசான் சொல்வழி - விடியற்காலையில்
ஆசிரியனது சொல்லின் வழியே, நித்தக்கடன் முடித்து - நாட் கடமைகளை
முடித்து, உச்சிதொட்டு அந்தி மாலையின் அளவும் - உசிப்பொழுது தொடங்கி மாலைப்பொழுது வரையும், புராணநூல் கேட்டு சிவபுராணங்களைக் கேட்டும்,
மாலை தொட்டு யாமம் ஓர் நான்கும் - மாலைப் பொழுது தொடங்கி நான்கு
யாமத்தினும், சேல் அன கண்ணான் பங்களைப் பூசை செய்க - கயல்
போலும் கண்களையுடைய இறைவியை ஒரு கூற்றிலுடைய சிவபெருமானைப்
பூசிக்கக் கடவர்; அப்பூசனை முடிவில் - அப்பூசை இறுதியில், மூலமந்திரம்
நூற்றெட்டால் நூற்றெட்டு முறையின் ஆகுதி முடித்தல் - சில மூலமந்திரம்
நூற்றெட்டினால் நூற்றெட்டு முறை ஆகுதி செய்யக் கடவர் எ - று.

     மூன்றனுருபு பிரித்துக் கூட்டப்பட்டது. முடித்தல் : வியங்கோள். (24)

வில்வமா யிரங்கொண் டாயிர நாமம்
     விளம்பிநால் யாமமுஞ் சாத்தல்
நல்லவைந் தெழுத்தா லைந்தெழுந் துருவி
     னாதனுக் கருக்கியங் கொடுத்தல்