எல்லையின் மூல மந்திரத் தாலு
மேனைமந் திரங்களி னாலும்
வில்லழ லோம்பிப் பூரணா குதிசெய்
தீறிலான் வேள்வியை முடித்தல். |
(இ
- ள்.) வில்வம் ஆயிரம் கொண்டு ஆயிர நாமம் விளம்பி -
ஆயிரம் வில்வங்களைக்கொண்டு ஆயிரம் திருப்பெயர்களையும் கூறி, நால்
யாமமும் சாத்தல் - நான்கு யாமங்களினும் அருச்சிக்கக் கடவர்; நல்ல ஐந்து
எழுத்தால் - நல்ல திருவைந்தெழுத்தினால், ஐந்து எழுத்து உருவின்
நாதனுக்கு அருக்கியம் கொடுத்தல் - அவ் வைந்தெழுத்தினையும்
உருவமாகவுடைய இறைவனுக்கு அருக்கியங் கொடுக்கக் கடவர்; எல்லைஇல்
மூல மந்திரத்தாலும் - அளவிறந்த மூலமந்திரங்களாலும், ஏனை
மந்திரங்களினாலும் - மற்றைய மந்திரங்களினாலும், வில் அழல் ஓம்பிப்
பூரணாகுதி செய்து - விளங்குகின்ற வேள்வித்தீயை வளர்த்துப் பூரணாகுதி
செய்து, ஈறு இலான் வேள்வியை முடித்தல் - முடிவில்லாத சோமசுந்தரக்
கடவுளின் வேள்வியை முடிக்கக்கடவர் எ - று.
இறைவன்
மந்திர வடிவமாதலை,
"சுத்தமாம் விந்து
தன்னிற் றோன்றிய வாத லானும்
சத்திதான் பிரேரித் துப்பின் றானதிட் டித்துக் கொண்டே
அத்தினாற் புத்தி முத்தி யளித்தலா லரனுக் கென்றே
வைத்ததா மந்தி ரங்கள் வடிவென மறைக ளெல்லாம்" |
|
"மந்திர மதனிற்
பஞ்ச மந்திரம் வடிவ மாகத்
தந்திரஞ் சொன்ன வாறிங் கென்னெனிற் சாற்றக் கேணீ
முந்திய தோற்றத் தாலு மந்திர மூலத் தாலும்
அந்தமில் சத்தி யாதிக் கிசைத்தலு மாகு மன்றே" |
என்னும் சிவஞானசித்தித்
திருவித்தங்களால் உணர்க. அருக்கியம் -
நீராற்செய்யும் ஒருவகை உபசாரம். வில் அழல் - வில் வடிவாகச் செய்த
குண்டத்தின் அழலுமாம். சாத்தல், கொடுத்தல், முடித்தல் என்பன
வியங்கோள். (25)
புலர்ந்தபின் னித்த வினைமுடித் தரம்பைப்
பொதுளும்பா சிலைபதின் மூன்றின்
நலந்தரு தூவெள் ளரிசிபெய் தினிய
நறியகாய் கறியொடு பரப்பி
அலந்தர வான்பா னிறைகுடம் பதின்மூன்
றரிசிமேல் வைத்தர னடியிற்
கலந்தவன் பினராய்ச் சிவார்ச்சனைக் குரிய
கடவுள்வே தியர்களை வரித்து. |
(இ
- ள்.) புலர்ந்தபின் - விடிந்தபின், நித்த வினை முடித்து -
நித்தியக் கடன்களைச் செய்து முடித்து, அரம்பை பொதுளும் பாசிலை
பதின்மூன்றில்-
|