வாழையின் செழித்த
பசிய இலைகள் பதின்மூன்றில் நலம் தரு தூ வெள்
அரிசி பெய்து - நன்மையைத் தருகின்ற தூய வெள்ளிய அரிசியை நிரப்பி,
இனிய நறிய காய்கறியொடு பரப்பி - இனிமையுடைய நல்ல காய்கறிகளைப்
பரப்பி, அலந்தர - அமைவுபெற ஆன்பால் நிறை குடம் பதின்மூன்று -
ஆவின்பால் நிறைந்த குடங்கள் பதின்மூன்றனை, அரிசி மேல் வைத்து -
அவ்வரிசியின் மேலே வைத்து, அரன் அடியில் கலந்த அன்பினராய் -
சிவபெருமான் திருவடியில் ஒன்றுபட்ட அன்பினையுடையவராய்,
சிவார்ச்சனைக்கு உரிய கடவுள் வேதியரை வரித்து - சிவபெருமானை
அருச்சித்தற்குரிய ஆதிசைவர்களை அழைத்து எ - று.
அரம்பை
- வாழை; அரம்பை யிலையெனக் கூட்டுக. கறியொடு ஓடு :
இசை நிறை. காய்கறி, வழக்கு. கடவுள் வேதியர் - சிவவேதியர். வரித்தல் -
அழைததல், நியமித்தல். (26)
காதணி கலனுங் கையணி கலனுங்
கவின்பெற வளித்தர னாக
ஆதரம் பெருக நினைந்தருச் சனைசெய்
தரியதக் கிணையொடும் பாதப்
போதணி காப்பு விசியிதன் கவிகை
பூந்துகின் முதற்பல வுடனே
மேதகு தானஞ் செய்துபின் குருவைக்
கற்புடை மின்னிடை யோடும். |
(இ
- ள்.) காது அணி கலனும் - காதிலணியும் குண்டலமும், கை
அணி கலனும் - கையி லணியுங் காப்பும், கவின் பெற அளித்து -
பொலிவுபெறத் தந்து, ஆதரம் பெருக - அன்பு மிக, அரனாக நினைந்து
(அவர்களைச்) சிவபெருமானாகவே கருதி, அருச்சனை செய்து - அருச்சித்து,
அரிய தக்கிணையொடும் - பெரிய தக்கிணையுடன், பாதப்போது அணி
காப்பு - பாதமாகிய மலரிலணியும் பாதுகையும், விசிறி தண் கவிகை பூந்துகில்
முதல் பலவுடனே - விசிறியும் குளிர்ந்த குடையும் அழகிய ஆடையுமாகிய
இவை முதலிய பலவற்றையும், மேதகுதானம் செய்து - சிறந்த தானமாகக்
கொடுத்து, பின் - பின்பு, குருவைக் கற்பு உடை மின் இடையோடும் -
குரவனை அவனுடைய கற்பு நிறைந்த மின்போலும் இடையினை யுடைய
மனைவியுடன் எ - று.
பாத
காப்பு - பார ரட்சை; பலவுடன் - பலவற்றையும் என்ப. மேதகு
- மேன்மை பொருந்திய. மின்னிடை : அன்மொழித் தொகை. (27)
ஆசனத் திருத்திப் பொலந்துகில் காதுக்
கணிகள்கைக் கணிகளு மணிந்து
வாசநன் மலரிட் டருச்சனை செய்து
மலைமக டலைவனை வரைந்து |
|