பூசனை செய்த படிமையோ டம்பொன்
பூதலம் பதாதிகள் பிறவுந்
தூசலர் மாலை கோட்டணி புனைந்த
சுரவிமா தானமுஞ் செய்து. |
(இ
- ள்.) ஆசனத்து இருத்தி - தவிசில் இருக்கச் செய்து, பொலம்
துகில் - பொன்னாடை (தரிப்பித்து), காதுக்கு அணிகள் கைக்கு அணிகளும்
அணிந்து - காதுக்கு அணிகலன்களும் கைக்கு அணிகலன்களும் அணிவித்து,
வாசம் நல் மலர் இட்டு அருச்சனை செய்து - மணமுள்ள நல்ல மலர்களால்
அருச்சித்து, மலை மகள் தலைவனை வரைந்து பூசனை செய்த படிமையோடு
- மலையரையன் புதல்வியாகிய உமை கேள்வனை நிருமித்துப் பூசிக்கப்பெற்ற
திருவுருவத்துடன், அம்பொன் பூதலம் பதாதிகள் பிறவும் - அழகிய
பொன்னும் நிலமும் ஏவலாளர்களும் பிறவுமாகிய தானங்களையும், தூசு அலர்
மாலை - ஆடையும் மலர்மாலையும், கோட்டு அணி - கொம்பினணியும்.
புனைந்த - அணிந்த, மா சுரபி தானமும் - பெரிய பசுவாகிய தானமும்,
செய்து - புரிந்து எ - று. (28)
இனையவா றுத்தா
பனமுடித் தாசா
னேவலாற் சிவனடிக் கன்பர்
தனையரோ டொக்க லுடனமு தருந்த
றகுதியிவ் விரதமுன் கண்ணன்
நனையதா மரையோ னிந்திரன் முதல்வா
னாடவர் மூவறு கணத்தோர்
அனைவரு நோற்றார் மனிதரு மனுட்டித்
தரும்பெறற் போகம்வீ டடைந்தார். |
(இ
- ள்.) இனையவாறு உத்தாபனம் முடித்து - இம்முறையாக
உத்தியாபனத்தை முடித்து, ஆசான் ஏவலால் - ஆசிரியன் கட்டளையினால்,
சிவன் அடிக்கு அன்பர் - சிவபிரான் திருவடிக்கண் அன்புடைய
அடியார்களுடனும், தனையரோடு ஒக்கல் உடன் - மக்களோடும்சுற்றத்
தோடும், அமுது அருந்தல் தகுதி - அமுதுண்ணல் முறையாகும்; இவ் விரதம்
-இச் சோமவார விரதத்தை, முன் - முன்னே, கண்ணன் - திருமாலும், நனைய
தாமரையோன் - தேனையுடைய தாமரை மலரில் வதியும் விரமனும், இந்திரன்
முதல் வானாடவர் - இந்திரன் முதலிய தேவர்களும், மூவறு கணத்தோர் -
பதினெண் கணத்தாரும் ஆகிய, அனைவம் - எல்லாரும், நோற்றார் -
அனுட்டித்தார்; மனிதரும் அனுட்டித்து அரும் பெறல் போகம் வீடு
அடைந்தார் - மனிதர்களும் நோற்றுப் பெறுதற்கரிய போகத்தையும்
வீடுபேற்றையும் அடைந்தனர் எ - று.
அன்பரோடும்
என விரிக்க. மூவறுகணம் முற் கூறப்பட்டன. பெறலரும்
என மாற்றுக. எண்ணும்மைகள் தொக்கன. (29)
|