சுந்தரன் றன்னைப் பூசைத் தொழில்செய்து வரம்பெற் றேகி
அந்தரத் தாறு செல்வா ரஃதறிந் தமரர் வேந்தன்
வந்தவ ரிருக்க வேறு மடங்கன்மான் றவிசு மூன்று
தந்திடப் பணித்தா னிட்டார் தனதரி யணையிற் றாழ. |
(இ
- ள்.) சுந்தரன் தன்னைப் பூசைத் தொழில் செய்து - சோம
சுந்தரக் கடவுளைப் பூசித்து, வரம் பெற்று ஏகி - வரம்பெற்று நீங்கி,
அந்தரத்து ஆறு செல்வார் - வான்வழியாகச் செல்வாராயினர்; அமரர்
வேந்தன் அஃது அறிந்து - தேவேந்திரன் அவ் வருவையை உணர்ந்து,
வந்தவர் இருக்க - வந்த மன்னர்கள் இருத்தற்கு, வேறு மடங்கல் மான்
தவிசு மூன்று - வேறு மூன்று சிங்காதனங்கள், தனது அதி அணையில்
தாழத் தந்திடப் பணித்தான் - தனது சிங்காதனத்திற் றாழ்ந்திருக்குமாறு
அமைக்கும்படி கட்டளையிட்டான், இட்டார் - (பணியாளர் அவ்வாறே)
அமைத்தனர் எ - று.
பூசைத்
தொழில் செய்து என்பது ஒரு சொல்லாய் இரண்டாம்
வேற்றுமைக்கு முடிபாயிற்று. அவர் வந்து இருக்க என்றுமாம்; மடங்கல்
மான் : இரு பெயரொட்டு. (32)
வான்வழி வந்த மூன்று மன்னரும் பொன்னா டெய்தி
ஊன்வழி குலிச வைவே லும்பர்போன் மருங்கிற் புக்கார்
தேன்வழி போந்தின் கண்ணிச் சேரனு மார்த்தார் வேந்துங்
கான்வழி தாரு நாடன் காட்டிய தவிசில் வைக. |
(இ
- ள்.) வான் வழி வந்த மூன்று மன்னரும் - வானின் வழியாக
வந்த மூன்று வேந்தரும், பொன் நாடு எய்தி - பொன்னுலகத்தை யடைந்து,
ஊன் வழி குலிசவைவேல் உம்பர்கோன் மருங்கில்புக்கார் - ஊன் சிந்துகின்ற
கூரிய வச்சிரப் படையையுடைய இந்திரன் அருகி லுற்றனர்; தேன் வழி
போந்தின் கண்ணிச் சேரனும் - (அவருள்) தேன் ஒழுகும் பனம்பூமாலை
யணிந்த சோழமன்னனும், கான்வழி தாரு நாடன் காட்டிய தவிசின்வைக -
மணம் வீசும் கற்பகத் தருவையுடைய நாட்டினையுடைய இந்திரன் காட்டிய
இருக்கையில் அமர எ - று.
பகைவர்
ஊன் சிந்துகின்ற. குலிசமாகிய வேல் : இருபெயரொட்டு.
வை - கூர்மை. போந்தின் : இன் சாரியை அல்வழிக் கண் வந்தது.
போந்தாகிய கணி, ஆராகிய தார் என்க. தாரு : நீட்டல் விகாரம். (33)
மைக்கடல் வறப்ப வென்ற வாகைவேற் செழியன் மௌலிச்
செக்கர்மா மணிவிற் காலத் தேவர்கோன் றவிசி லேறி
ஒக்கவீற் றிருந்தா னாக வும்பர்கோ னழுக்கா றெய்திப்
பக்கமே யிருந்த வேனைப் பார்த்திபர் முகத்தைப் பாரா. |
(இ
- ள்.) மைக்கடல் வறப்ப வென்ற வாகை வேல் செழியன் - கரிய
கடலானது வறக்குமாறு வென்ற வெற்றிமாலை தரித்த வேற்படையையுடைய
|