(இ
- ள்.) வையம் மாயவன் வடிவு ஆயது - புவியானது திருமாலின்
வடிவம் போன்றது; தென்னன்நாடு - (அப்புவியின் ஒருகூறாகிய) பாண்டியன்
நாடானது, மால்சேய உந்திபங்கயம் ஆயது - அத்திருமாலின் சிவந்த
உந்தித்தாமரை போன்றது; பொதியம் - (அந்நாட்டின்) பொதியின்
மலையானது. அலர்மேல் போய மென்பொகுட்டு ஆயது - அத்தாமரை
மலர்மேல் நீண்ட மெல்லிய கொட்டை போன்றது; அகத்தியன் -
(அம்மலையின்கண்) அகத்திய முனிவன், அப்பொகுட்டின் மேய நான்முகன்
- அக்கொட்டையிலிருக்கும் நான்முகன் (போல்வான்); முத்தமிழ் - (அம்
முனிவன் போற்றி வளர்த்த) மூன்று பிரிவினதாகிய தமிழானது, வேதம் -
(அந்நான்முகன் அருளிய) வேதம் (போன்றது) எ - று.
மாயவன்
- கருநிற முடையவன்; மாயைவல்லானும் ஆம். பங்கயம் -
சேற்றில் முளைப்பது; காரண விடுகுறி. தென்னன் - தெற்கின் கண்ணதாய
நாட்டையாள்பவன், பாண்டியன். முத்தமிழ் - இயல், இசை, நாடகம் என்பன.
வழக்குஞ் செய்யுளுமாகிப் பொருளுணர்த்து வதாய தமிழ் இயற்றமிழ்.
பண்ணுடல் கூடியது இசைத்தமிழ். பண்ணொடும் அபிநயத்தொடுங் கூடியது
நாடகத்தமிழ. இயலின்றி இசையும், இயல் இசையின்றி நாடகமுமில்லை.
எனவே, இவை மூன்றும் மொழியின் மூவகை யியக்கத்தைக் குறிப்பனவென்க.
தமிழ இம்மூன்று துறையிலும் எண்ணிறந்த நூல்களை உடைத்தா
யிருந்தமையின் முத்தமிழ் என வழங்கப்பெறுவதாயிற்று. முத்தமிழை
வேதமெனக் கூறவந்தவர் அதற்கேற்பப் புவிமுதலியவற்றை மாயவன் வடிவு
முதலியவாகக் கூறினர். அகத்தியன் தென்மதுரை யகத்துத் தலைச்சங்கத்து
வீற்றிருந்து தமிழறிவுறுத்தியும், தொல்காப்பியன் முதலிய பன்னிருவர்க்குத்
தமிழறிவுறுத்தியும், அகத்தியமென்னும் முத் தமிழிலக்கணத்தை
அருளிச்செய்தும் பல்லாற்றானும் தமிழை வளம்படுத்திச் செந்தமிழ்க்
குரவனாகத் திகழந்தமையின், தமிழை இவன் வெளியிட்டானாக உபசரித்துக்
கூறுவர். அகத்தியற்கு முன்னும் தமிழ் உயரிய நிலையிலிருந்ததென்பதே
ஆராய்ச்சியாற் பெறப்படும் உண்மை. இதனை அகத்தியர் என்னும்
உரைநூலுட் காண்க. சேய : செம்மை யென்னும் பண்படியாக வந்த
குறிப்புவினைப்பெயரெச்சம். மேவிய என்பது மேய என விகாரமாயிற்று. (50)
ஏக மாகிய மேருவும் பொதியமே யிரும்பொன்
ஆகு மேருவைச் சூழ்ந்தசாம் பூநத யாறு
நாக ராடுதண் பொருநையே நாவலா றுடுத்த
போக பூமியும் பொருநைசூழ் பூமியே போலும். |
(இ
- ள்.) ஏகம் ஆகிய மேருவும் - ஒப்பற்ற மேருமலையும்,
பொதியமே - பொதியின் மலையே; இரும்பொன் ஆகும் மேருவை - பெரிய
பொன்மயமாகிய மேருமலையை, சூழ்ந்த - சுற்றியுள்ள, சாம்பூநதயாறும் -
சாம்பூநதம் என்னும் நதியும், நாகர் ஆடு தண் பொருநையே -
(அப்பொதியின் மலையைச் சூழ்ந்த) தேவர்களும் நீராடுதற்குரிய தண்ணிய
பொருநை நதியே; நாவல்ஆறு உடுத்த போகபூமியும் - நாவலாற்றால்
சூழப்பெற்ற போக பூமியும், பொருநைசூழ பூமியே போலும் - பொருநையால்
சூழப்பெற்ற பூமியே எ - று.
|