உக்கிர பாண்டியன்,
மௌலிச் செக்கர் மாமணிவில் கால - முடியிற் பதித்த
சிவந்த பெரிய மணிகள் ஒளி வீச, தேவர் கோன் தவிசில் ஏறி -
தேவேந்திரனது ஆதனத்திலேறி, ஒக்க விற்றிருந்தான் - அவனுடன்
பெருமிதமாக இருந்தான்; ஆக - அங்ஙனம் இருக்க, உம்பர்கோன்
அழுக்காறு எய்தி - தேவர்க்கரசன் பொறாமையுற்று, பக்கம் இருந்த ஏனைப்
பார்த்திபர் முகத்தைப் பாரா - அருகிலிருந்த மற்றைச் சேர சோழ
மன்னர்களின் முகத்தை நோக்கி எ - று.
செக்கர்
- செம்மை : பண்புப் பெயர். ஒக்க - சமமாக என்னலுமாம்.
வீற்றிருத்தல் - வீறுடனிருத்தல்; வீறு - பெருமிதம். ஆக : அசையுமாம். (34)
முகமனன் கியம்பி நீவிர் வந்ததென் மொழிமி னென்ன
மகபதி யெங்க ணாட்டின் மழைமறுத் தடைந்தே மென்றார்
அகமலர்ந் தனையார் நாட்டி னளவும்வான் சுரக்க நல்கி
நனைமணிக் கலம்பொன் னாடை நல்கிநீர் போமி னென்னான். |
(இ
- ள்.) முகமன் நன்கு இயம்பி - நன்றாக உபசார மொழகூறி,
நீவிர் வந்தது என் -நீங்கள் வந்த காரணம் என்னை, மொழிமின்என்ன -
கூறுங்கள் என்று சொல்ல, மகபதி - இந்திரனே, எங்கள் நாட்டில் மழை
மறுத்து அடைந்தேம் என்றார் - எங்கள் நாட்டில் மழை இன்மையால்
(அதனைவேண்டி) இங்கு வந்தேம் என்று கூறினர்; அகமலர்ந்து - (இந்திரன்)
மனமகிழ்ந்து, அனையார் நாட்டின் அளவும் வான் சுரக்க நல்கி -
அவ்விருவர் நாடுகளின் அளவும் மழைபெய்ய அருளி, நகை மணிக்கலம்
பொன் ஆடை நல்கி - ஒளிபொருந்திய நவமணியாலாகிய அணிகலன்களும்
பொன்னாடைகளும் தந்து, நீர் போமின் என்றான் - நீவிர் செல்லுங்கள்
என்று விடையளித்தான் எ - று.
மகபதி
: விளி : மறுத்தலால் என்பது மறுத்தெனத் திரிந்து நின்றது.
(35)
அன்னவ ரகன்ற பின்னை யமரர்போன் கன்னி நாடன்
தன்னரி யணைமே லொககத் தருக்கினோ டிருக்கு மாறும்
பின்னரு மாரி வேண்டாப் பெருமித வீறு நோக்கி
இன்னது புலப்ப டாமை யினையதோர் வினைய முன்னா. |
(இ
- ள்.) அன்னவர் அகன்ற பின்னை - அம்மன்னவர்கள் போன
பின்பு, அமரர் கோன் - தேவேந்திரன், கன்னி நாடன் - கன்னி நாடனாகிய
உக்கிரவழுதி, தன் அரி அணை மேல் ஒக்கத் தருக்கினோடு இருக்குமாறும்
- தனது சிங்காதனத்தின்கண் சமமாக இறுமாப்புடன் இருக்குந் தன்மையையும்,
பின்னரும் மாரி வேண்டாப் பெருமித வீறும் நோக்கி - பின்னும் மழையை
வேண்டாதிருக்கும் மிக்க பெருமிதத்தையும் நோக்கி, இன்னது புலப்படாமை
- இது வெளிப்படாதவாறு, இனையது ஓர் வினையம் உன்னா - இங்ஙனமாய
ஒரு சூழ்ச்சியைக் கருதி எ - று.
பெருமித
வீநு : ஒரு பொருட் பன்மொழி. இன்னதென்றது தன்மனக்
கோளினை. இனையது என்றது பின் வருவதனைச் சுட்டிற்று. முன்னா
வெனப் பிரித்தலுமாம். (36)
|