I


இந்திரன் முடிமேல் வளையெறிந்த படலம்601



பொற்புற வரிசை செய்வான் போலள விறந்தோர் தாங்கி
வெற்புறழ் திணிதோ ளாற்றன் மெலிவதோ ராரந்தன்னை
அற்புத வளித்தான் வாங்கி யலர்மதுத் தார்போ லீசன்
கற்புடை யுமையாண் மைந்தன் கதுமெனக் கழுத்தி லிட்டான்.

     (இ - ள்.) பொற்பு உற வரிசை செய்வான்போல் - அழகு பொருந்தச்
சிறப்புச் செய்கின்றவனைப்போல, அளவு இறந்தோர் தாங்கி -
அளவற்றவர்களாலே தாங்கிவரப்பட்டு, வெற்பு உறழ் திணி தோள் ஆற்றல்
மெலிவது ஓர் ஆரந்தன்னை - (அவர்கள்) மலையை யொத்த திண்ணிய
தோளின்வலி குறைதற்குக் காரணமான தோர் முத்து மாலையை, அற்பு உற
அளித்தான் -அன்பு பொருந்தக் கொடுத்தான்; ஈசன் கற்பு உடை உமையாள்
மைந்தன் - சோமசுந்தரக் கடவுளின் கற்பு நிறைந்த தேவியாகிய தடாதகைப்
பிராட்டியாரின்புதல்வனாகிய உக்கிரவழுதி, வாங்கி - (அதனை) ஏற்று, மது
அலர்தார் போல் கதுமெனக் கழுத்தில் இட்டான் - தேன் ஒழுகும் மலர்
மாலை போல விரைந்து கழுத்தில் அணிந்து கொண்டான் எ - று.

     அளவிறந்தோர் - கிங்கரர். தாங்கி யென்னும் எச்சம் மெலிவது
என்னும் வினைகொண்டது. முன் ஏனையோர் பலரால் தாங்கப்பட்டு அவர்
தோளாற்றல் மெலிதற்கேதுவாயிருந்த ஆரம் என்றுரைப்பாருமுளர்.
எளிதினேந்தினானென்பார் ‘தார்போல் கதுமென இட்டான்’ என்றார். கதுமென
விரைவுக்குறிப்பு. பாண்டியன் ஆரம் பூண்ட இவ்வரலாறு சிலப்பதிகாரத்திற்
பலவிடத்திற் குறிக்கப்பெற்றுள்ளமை பின் வருவனவற்றால் அறிக.

"திங்கட் செல்வன் றிருக்குலம் விளங்கச்
செங்கணா யிரத்தோன் றிறல்விளங் காரம்
பொங்கொளி மார்பிற் பூண்டோன் வாழி"
 
"தேவர்கோன் பூணாரந் தென்னர்போன் மார்பினவே"
"தேவரார மார்பன்வாழ்க வென்றுபந் தடித்துமே"
"வானவர்கோ னாரம் வயங்கியதோட் பஞ்சவன்றன்
மீனக் கொடிபாடும் பாடலே பாடல்"

(37)

கண்டனன் கடவு னாதன் கழியவு மிறும்பூ துள்ளங்
கொண்டன னின்று தொட்டுக் குரையளி துழாவு நிம்பத்
தண்டழை மார்ப வாரந் தாங்குபாண் டியனென் றுன்னை
மண்டல மதிக்க வென்றான் வானநா டுடைய மன்னன்.

     (இ - ள்.) கடவுள் நாதன் வானநாடு உடைய மன்னன் - தேவர்கள்
தலைவனாகிய வானநாட்டையுடைய இந்திரன், கண்டனன் - (அதனைக்)
கண்டு, கழியவும் உள்ளம் இறும்பூது கொண்னன் - மிகவும் உள்ளத்தில்
வியப்படைந்தவனாய், குரை அளிதுழாவு நிம்பத்தண் தழைமார்ப -
ஒலிக்கின்ற வண்டுகள் மகரந்தத்தில் அளையும் வேம்பினது குளிர்ந்த மாலை
பொருந்திய மார்பினையுடைய உக்கிரவழுதியே, உன்னை - நின்னை,