I


602திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



மண்டலம் - உலகமானது, இன்று தொட்டு - இன்று முதல், ஆரம்தாங்கு
பாண்டியன் என்று மதிக்க என்றான் - ஆரந்தாங்கு பாண்டியன் என்று
மதிப்பதாக என்று கூறினான் எ - று.

     கடவுணாதனாகிய மன்னன் எனக் கூட்டுக. தழை : மாலைக்கு ஆகு
பெயர். மண்டலம் - மண்டலத்திலுள்ளர். (38)

அன்னது சிறிது மெண்ணா தங்குநின் றிழிந்து தென்னன்
தன்னக ரடைந்தா னிப்பாற் சதமக னாணை யாலம்
மன்னவ ரிருவர் நாடு மழைவளம் பெருகப் பெய்த
தென்னவ னாடு பண்டைச் செயலதா யிருந்த தன்றே.

     (இ - ள்.) தென்னன் - உக்கிரவழுதி, அன்னது சிறிதும் எண்ணாது -
அப்புகழ்ச்சியைச் சிறிதுங் கருதாது, அங்கு நின்று இழிந்துதன் நகர்
அடைந்தான் - அவ் வாதனத்தினின்றும் இறங்கித் தனது நகரத்தை
யடைந்தான்; இப்பால் - பின், சதமகன் ஆணையால் - இந்திரன்
கட்டளையால், அம் மன்னவர் இருவர் நாடும் வளம் பெருக மழை பெய்த -
அச் சேர சோழ வேந்தர் இருவர் நாட்டிலும் வளம் பெருகுமாறு மழைகள்
பொழிந்தன; தென்னவன் நாடு பண்டைச் செயலதாய் இருந்தது - பாண்டியன்
நாடு முன்னைத் தன்மையாகவே மழையின்றி யிருந்தது எ - று.

     எண்ணாது - மதியாது. வளம் பெருக மழை பெய்தனவென மாறுக.
அன்று, ஏ : அசைகள். (39)

ஆயதோர் வைகல் வேட்டை யாடுவா னண்ணல் விண்ணந்
தாயதோர் பொரியக் குன்றிற் சந்தனச் சார னண்ணி
மேயதோ லரிமா னேனம் வேங்கையெண் கிரலை யின்ன
தீயதோர் விலங்கு வேட்டஞ் செய்துயிர் செகுக்கு மெல்லை.

     (இ - ள்.) ஆயது ஓர் வைகல் - அங்ஙனமாகியதொரு நாளில்,
அண்ணல், வேட்டை ஆடுவான் - உக்கிரவழுதி வேட்டை யாடுதற்
பொருட்டு, விண்ணம் தாயது பொதியக் குன்றில் - வானுலகை ஊடுருவிச்
சென்றதாகிய பொதியின் மலையின், சந்தனச் சாரல் நண்ணி - சந்தன
மரங்கள் நெருங்கிய சாரலை அடைந்து, மேய தோல் அரிமான் ஏனும்
வேங்கை எண்கு இரலை இன்ன - அங்குள்ள யானையும் சிங்கமும் பன்றியும்
புலியும் கரடியும் மானும் என்னும் இவை முதலாகிய, தீயது ஓர் விலங்கு -
தீமையைக் கருதும் விலங்குகளை, வேட்டம் செய்து உயிர் செகுக்கும் எல்லை
- வேட்டையாடி (அவைகளின்) உயிரைப் போக்கும் பொழுது எ - று.

     அங்ஙனம் மழையின்றி யிருக்கு நாளில் ஒருநாள் என்க. விண்ணம்
என்பதில் அம்மும், தாயதோர் என்பதில் ஓரும் அசைகள். தோல் - யானை.
எண்கு - கரடி. இரலை - புல்வாயின் ஆண். ஆகியது, தாவியது, மேவிய
என்பன ஆயது, தாயது, மேய என விகாரமாயின. தீயது அது : பகுதிப்
பொருள் விகுதி; ஓர்தல் - கருதுதல். (40)