ஆடின குறைத்தலை யவிந்த போர்க்களம்
பாடின பாரிடம் விந்தைப் பாவைதாள்
சூடின கூளிகள் சோரி சோரப்பார்
மூடின பிணக்குவை யண்ட முட்டவே. |
(இ
- ள்.) குறைத்தலை ஆடின - கவந்தங்கள் ஆடின; போர்க்களம்
அவிந்த - போர்க்களத்திற் போர் ஒழிந்தன; பாரிடம் பாடின - பூதங்கள்
பாடின; கூளிகள் விந்தைப் பாவை தாள் சூடின - பேய்கள் கொற்றவையின்
திருவடியை (முடியிற்) சூடின; பிணக்குவை சோரி சோர அண்டம் முட்ட பார்
மூடின - பிணக் குவியல்கள் குருதி ஒழுகாநிற்க வானை அளாவ நிலவுலகை
மூடின எ - று.
குறைத்தலை
- தலையற்ற உடல். போர் அவிந்ததனைப் போர்க்களம்
அவிந்தன வென்றார்; அவிதல் - அடங்குதல். விந்தையாகிய பாவை யென்க.
(49)
வெஞ்சின வலாரிதன் வீரச் சேனைகள்
துஞ்சின கண்டெரி சொரியுங் கண்ணனாய்ப்
பஞ்சின்மு னெரியெனப் பதைத்துத் தெய்வத
வஞ்சினப் படைகளான் மலைவ துன்னினான் |
(இ
- ள்.) வெஞ்சின வலாரி - கொடிய சினத்தையுடைய இந்திரன்,
தன் வீரச்சேனைகள் துஞ்சின கண்டு - தனது வீரமுள்ள சேனைகள்
இறந்தனவற்றை நோக்கி, எரி சொரியும் கண்ணனாய் - அழல் சிந்துங்
கண்களை யுடையனாய், பஞ்சின முன் எரி எனப் பதைத்து - பஞ்சின்
முன்னே நெருப்பு (விரைந்து பற்றல்) போல் (சினம் விரைந்து பற்றப்)
பதைத்து, வஞ்சினம் தெய்வதப் படைகளால் மலைவது உன்னினான் - நெடு
மொழி கூறித் தெய்வத் தன்மையையுடைய படைக் கலங்களினால்
போர்செய்தலைங் கருதினான் எ - று.
வலாரி
- வலனுக்குப் பகைவன். துஞ்சின - வலி கெட்டன
என்னலுமாம்; தொழிற் பெயருமாம். வீரச்சேனை யென்றது இகழ்ச்சி யென்றும்,
வஞ்சினப் படைகள் என்றது வீரர் வஞ்சினங் கூறிப் பொருதலைப் படைகள்
மேலேற்றிய தென்றும் கொள்ளலு மாகும். மலைவது : தொழிற் பெயர். (50)
[அறுசீரடி
யாசிரிய விருத்தம்]
|
வெங்கதிப்
படைவிட் டார்த்தான்
விண்ணவ னதனைத் திங்கட்
பைங்கதிர்ப் படைதொட் டோச்சி
யவித்தனன் பாராள் வேந்தன்
சிங்கவெம் படைவிட் டார்த்தான்
தேவர்கோ னதனைச் சிம்புட்
புங்கவன் படைதொட் டோச்சி
யடக்கினான் புணரி வென்றோன். |
|