(இ
- ள்.) விண்ணவன் வெங்கதிர்ப் படை விட்டு ஆர்த்தான் -
இந்திரன் கொடிய பரிதிக்கணையை விட்டு ஆரவாரித்தான்; அதனை - அக்
கணையை, பார் ஆள் வேந்தன் - நில வுலகை ஆளுகின்ற பாண்டிய
மன்னன், பைங்கதிர்ப் படை தொட்டு ஓச்சி அவித்தனன் - இளங்
கிரணத்தையுடைய திங்கட் கணையை (வில்லிற்) பூட்டி விடுத்து அழித்தான்;
தேவர் கோன் சிங்க வெம்படை விட்டு ஆர்த்தான் - தேவேந்திரன் கொடிய
நரசிங்கக் கணையை விடுத்து முழங்கினான்; அதனை - அந்தக் கணையை,
புணரி வென்றோன் - கடலை வென்றவனாகிய உக்கிரவழுதி, புங்கம் வன்
சிம்புள் படை தொட்டு ஓச்சி அடக்கினான் - மிக்க வலிமையுடைய
சரபக்கணையை (வில்லிற்) பூட்டி விடுத்து அழித்தான் எ - று
புங்கம்
- உயர்ச்சி. (51)
தானவர் பகைவன் மோக சரந்தொடுத் தெறிந்தா னாக
மீனவ னதனை ஞான வாளியால் விளித்து மாய்ந்து
போனபின் மற்போ ராற்றப்* புக்கனர் புக்கார் தம்மில்
வானவன் மண்ணி னான்மேல் வச்சிரம் வீசி யார்த்தான். |
(இ
- ள்.) தானவர் பகைவன் - அசுரர்கள் பகைவனாகிய இந்திரன்,
மோகசரம் தொடுத்து எறிந்தானாக - மோகனக் கணையை (வில்லிற்) பூட்டி
விடுக்க, அதனை - அக் கணையை, மீனவன் - பாண்டியன், ஞானவாளியால்
விளித்து - ஞானக்கணையால் அழித்தலால், மாய்ந்து போனபின் - (அஃது)
அழிந்தபின், மல்போர் ஆற்றப் புக்கனர் - (இருவரும்) மற்போர் புரியத்
தொடங்கினார்கள்; புக்கார் தம்மில் - அங்ஙனம் தொடங்கினவர்களுள்,
வானவர் - இந்திரன், மண்ணினான்மேல் வச்சிரம் வீசி ஆர்த்தான் -
பாண்டியன்மேல் வச்சிரப் படையை விடுத்து ஆரவாரித்தான் எ - று.
மோக
சரம் - அறிவை மயக்கும் அம்பு. விளித்து - விளியச் செய்து : பிறவினை; விளித்தலாலென்பது
திரிந்து நின்றது. (52)
காய்சின மடங்க லன்னான் கைவளை சுழற்றி வல்லே
வீசினன் குலிசந் தன்னை வீழ்த்தது+ விடுத்தான் சென்னித்
தேசினன் மகுடந் தள்ளிச் சிதைத்தது சிதைத்த லோடுங்
கூசின னஞ்சிப் போனான் குன்றிற கரிந்த வீரன். |
(இ
- ள்.) காய் சின மடங்கல் அன்னான் - மிக்க சினத்தையுடைய
சிங்கத்தை ஒத்த உக்கிரவழுதி, கைவளை சுழற்றி வல்லே வீசினன் -
கையிலுள்ள திகிரிப்படையைச் சுழற்றி விரைந்து வீசினன்; குலிசம் தன்னை
வீழ்த்து - (அப்படை) வச்சிரப் படையை அழித்து, அதுவிடுத்தான் -
அப்படையை விடுத்தவனாகிய இந்திரனது, சென்னி தேசின் நல் மகுடம்
தள்ளிச் சிதைத்தது - தலையிலுள்ள ஒளி வீசும் நல்ல முடியைக் கீழே
வீழ்த்தி அழித்தது; சிதைத்த லோடும் - (அங்ஙனம்) சிதைத்த வளவில்,
குன்று இறகு அரிந்த வீரன் கூசினன் அஞ்சிப் போனான் - மலையின்
சிறைகளை அறுத்த வீரனாகிய இந்திரன் நாணமும் அச்சமும் உடையனாய்
ஓடினான் எ - று.
(பா
- ம்.) * ஆற்றிப். +விண்டது.
|