I


திருநாட்டுச் சிறப்பு61



     இணையாயது பிறிதின்மையின் ‘ஏகமாகிய’ என்றார். மேரு
முதலியவாகக் கூறப்படுவனவெல்லாம் பொதியின் முதலியவே போலும் எனத்
தங்குறிப்பினை யேற்றுவார் ‘பூமியே போலும்’ என்றார் எனலுமாம்.
போலும் : ஒப்பில்போலி; உவமச் சொல்லாக்கி, மேரு முதுலியன பொதியின்
முதலியவற்றை ஒக்குமெனக்கூறின் தடுமாறுவம மாம்; இதனை விபரீத
வுவமையென்றுங் கூறுவர். சாம்பூநதம் என்றதனைத் தமிழால் ‘நாவலாறு’
என்றார். நாவலாறு - நாவற்கனிச் சாறாகிய ஆறு. நாகர் - தேவர். போகபூமி
- இன்பநுகர்ச்சி மாத்திரையே யுடையபூமி.மேரு முதலியவற்றின் பெற்றியைக்
கந்தபுராண, அண்ட கோச படலத்திற் காண்க. உம்மைகள் உயர்வு சிறப்புப்
பொருளன.

சிறந்த தண்டமி ழாலவாய் சிவனுல கானாற்
புறந்த யங்கிய நகரெலாம் புரந்தரன் பிரமன்
மறந்த யங்கிய நேமியோ னாதிய வானோர்
அறந்த யங்கிய வுலகுரு வானதே யாகும்.

     (இ - ள்.) சிறந்த தண்தமிழ் ஆலவாய் - சிறந்த தண்ணிய தமிழை
யுடைய திருவாலவாயானது, சிவன் உலகு (உரு) - சிவலோக வடிவா
யுள்ளது; ஆனால் - அங்ஙனமாயின், புறம் தயங்கிய நகர் எலாம் -
(அவ்வாலவாயின்) புறத்தில் விளங்குகின்ற நகரங்கள் அனைத்து, புரந்தரன்
பிரமன் - இந்திரன் பிரமன், மறம் தயங்கிய நேமியோன் - வீரம்
விளங்குகின்ற சக்கரப் படையையுடைய திருமால், ஆதிய வானோர் -
முதலிய தேவர்களின், அறம் தயங்கிய உலகு உரு ஆனதே ஆகும் -
தருமம் விளங்குகின்ற உலகங்களின் வடிவமானதேயாகும் எ - று.

     சங்கமிருந்து தமிழாராய்ந்த பதியாகலின் ‘தண்டமிழாலவாய்’ என்றார்.
ஆலவாய் சிவனுலகானால் என்றது, அத் திருப்பதியிலே வரகுணனுக்குச்
சிவலோகங் காட்டி யருளினமையை உட்கொண்டென்க. இதனை
இப்புராண
த்து வரகுணனுக்குச் சிவலோகங்காட்டிய படலத்தானறிக. அன்றி
இறைவன், உமை, முருகவேள் என்னும் மூவரும் இருந்து அரசுபுரிந்தமை
கருதியுமாம். "அப்பாண்டி நாட்டைச் சிவலோக மாக்குவித்த" என்பது பாண்டி
நாட்டையே சிவலோகமாகச் கூறுகின்றது. ஆலவாய் சிவனுலகென்பது
யாவரானும் தெளியப்படுதலின் அதுபோலப் புறந் தயங்கிய நகரங்கள் ஏனை
வானோரின் உலகங்களாமென்பது தெளியப்படுமென்பார் ‘சிவனுலகானால்’
என்றார். ‘நீரின் றமையா துலகெனின்’ என்பதற்குப் பரிமேலழகரெழுதிய
உரையுங்காண்க. நகரெலாம் ஆனது என்றது, பன்மை யொருமை
மயக்கம்.(52)

வளைந்த நுண்ணிடை மடந்தையர் வனமுலை மெழுகிக்
களைந்த குங்குமக் கலவையுங் காசறைச் சாந்தும்
அளைந்த தெண்டிரைப் பொருநையோ வந்நதி ஞாங்கர்
விளைந்த செந்நெலும் கன்னலும் வீசுமவ் வாசம்.

     (இ - ள்.) வளைந்த நுண்இடை மடந்தையர் - நுடங்கிய நுண்ணிய
இடையையுடைய மகளிர், வனம் முலை மெழுகிக் களைந்த - (தங்கள்)
அழகிய கொங்கைகளிற் பூசிக்கழுவிய, குங்குமக் கலவையும் காசறைச்