(இ
- ள்.) இடுக்கண் வந்து உயிர்க்கும் ஊற்றம் எய்தினும் - துன்ப
முண்டாகி உயிருக்கும் இடையூறு வந்தாலும், வாய்மை காத்து -
மெய்ம்மையைப் பாதுகாத்து, வடுக்களைந்து ஒழுகும் - குற்றத்தையகற்றி
ஒழுகும், நாலாம் மரபினான் உரையை - நான்காங் குலத்தினனாகிய அவன்
கூறிய மொழியை, ஆத்தன் எடுத்து உரை மறைபோல் சூழ்ந்து - இறைவன்
(உயிர்களின் பொருட்டு) எடுத்துக் கூறிய மறை மொழிபோல் மதித்து, சிறைக்
களத்து இட்ட யாப்பு விடுத்தனன் - சிறைச்சாலையின்கண் இட்டிருந்த
தளையினை நீக்கினான்; மேகம் எல்லாம் பகடுபோல மீண்டன - முகில்கள்
நான்கும் யானைகள் போல மீண்டு சென்றன எ - று.
இடுக்கண்
- வறுமை முதலிய துன்பம்; உயிர்க்கும் : உம்மை எச்சமும்
சிறப்புமாம். ஊற்றம் - ஊறு. வாய்மை காத்தலை வழுக்கறு வாய்மை
மாண்பும் என மேலே உரைத்ததனுள்ளுங் காண்க. வேத மொழிபோற்
பொய்யாதெனக் கருதி, களவேள்வி நாட்டில் ஏழூர்களையுடைய ஒருவன்
நாம் முன் என்று கூறிப் புணை நின்றான் என நம்பி திருவிளையாடல்
கூறும். (58)
தேவர்கோ னேவ லாலே திங்கண்மும் மாரி பெய்து
வாவியுங் குளனும் யாறு மடுக்களு மடுத்துக் கள்வாய்க்
காவிசூழ் வயலுஞ் செய்யுஞ் செந்நெலுங் கன்னற் காடும்
பூவிரி பொழிலுங் காவும் பொலிந்தது கன்னி நாடு. |
(இ
- ள்.) தேவர்கோன் ஏவலாலே - தேவேந்திரன் கட்டளை யாலே,
திங்கள் மும்மாரி பெய்து - மாதம் மூன்று மழை பெய்துவர, வாவியும்
குளனும் யாறும் மடுக்களும் மடுத்து - வாவிகளும் குளங்களும் ஆறுகளும்
மடுக்களும் நிறைதலால், கள்வாய் காவி சூழ் வயலும் செய்யும் - தேன்
ஒழுகும் வாயினையுடைய குவளைகள் வயல்களிலும் செய்களிலுமுள்ள,
செந்நெலும் கன்னல் காடும் - செந்நெற் காடுகளாலும் கரும்பின்
காடுகளாலும், பூவிரி பொழிலும் காவும் - மலர் விரிந்த பூஞ்சோலைகளாலும்
இளமரக்காக்களாலும். கன்னிநாடு பொலிந்தது - கன்னி நாடு பொலிவு
பெற்று விளங்கியது எ - று.
பெய்ய
வென்பது பெய்து என்றும், மடுத்தலால் என்பது மடுத்து
என்றும் திரிந்து நின்றன. செந்நெலும் கன்னற்காடும் உடையவயல் களாலும்
செய்களாலு என்று கருத்துக் கொள்க. செய் - படுகர் போலும். (59)
ஆகச்
செய்யுள் - 1100.
|