பாண்டி மன்னன், பகவு
உறு மதியம் சூடும் பரஞ்டர் முன்போய் - பிளவு
பொருந்திய மதியையணிந்த சிவபரஞ்சோதியின் திருமுன் சென்று, தாழ்ந்து -
வணங்கி, ஐய - ஐயனே, வையம், உயிர்கள், மிக உறுபசியால் மெலிவது
என்னா - மிகவும் உற்ற பசியினால் வருந்துகின்றனவே என்று, தகவு உற
இரங்கி கண்ணீர் ததும்பி நின்று இரந்து வேண்ட - மிகவும் இரங்கிக்
கண்ணீர் பொழிய நின்று குறையிரந்து வேண்ட எ - று.
குழவியுற்ற
நோயைக் கண்டு எல்லையின்றி வருந்துதலும், அந்
நோயைப் போக்குதற்குத் தான் மருந்துண்லும் உடையதாயினுங் காட்டில்
அன்பிற்கு எடுத்துக்காட்டு வேறில்லை;
என்றார் கம்பநாடர்.
"ஓத நீருல கொப்ப
நிழற்றலால் தாதையே" |
என்றார் திருத்தக்கதேவர்.
தாய்போல் இரங்கித் ததும்பி நின்று வேண்ட
எனக் கூட்டுக. வையம் : ஆகுபெயர். மெலிவதை, ஐ : சாரியை; வினைத்திரி
சொல்லுமாம். தகவுற - மிக வென்னும் பொருட்டு. (7)
திரைக்கடல் விடஞ்சேர் கண்டன் காலத்தின் செவ்வி நோக்கி
இரக்கமில் லவர்போல் வாளா விருத்தலு மருத்தார் மார்பன்
கரைக்கரி தாய துன்பக் கடலில்வீழ்ந் திருக்கை புக்கான்
அரக்கர்போர்க் கடலி னீந்தி யருக்கனீர்க் கடலில் வீழ்ந்தான். |
(இ
- ள்.) திரை கடல் விடம் சேர் கண்டன் - அலைகளையுடைய
கடலிற்றோன்றிய நஞ்சு பொருந்திய திருமிடற்றையுடைய சோம சுந்தரக்
கடவுள், காலத்தின் செவ்வி நோக்கி - காலத்தின் இயல்பைக் கருதி, இரக்கம்
இல்லவர்போல் வாளா இருத்தலும் - கருணையில்லாதவர்போலச் சும்மா
இருக்கவும், மருத்தார் மார்பன் - மணம் பொருந்திய மாலையை யணிந்த
மார்பினையுடைய உக்கிரவழுதி, கரைக்கு அரிதாய துன்பக்கடலில் வீழ்ந்து
இருக்கை புக்கான் - கரையில் அடங்குதலில்லாத துன்பக்கடலில் விழுந்து
இருப்பிடம் சென்றான்; அருக்கன் - சூரியன், அரக்கர் போர்க்கடலின் நீந்தி
நீர்க்கடலில் வீழ்ந்தான் - அரக்கர்கள் செய்யும் போர்க்கடலினின்று நீங்கி
நீர்க்கடலிற் குளித்தான் எ - று.
வானோரைப்
புரத்தற்குக் கொடிய நஞ்சையும் அயின்ற பேரருளாளன்
இப்பொழுது மக்களுறுந் துயரை நோக்கியும் வாளா விருத்தல் இரக்க மின்மை
யன்றென்பார், காலத்தின் செவ்வி நோக்கி இரக்கமில்லவர்போல் என்றார்.
காலத்தின் செவ்வியாவது உயிர்களின் வினைக்கீடாகத் தனது ஆணைவழி
நடக்கும் காலத்தின்நிலைமை. கரைக்கு : உருபு மயக்கம்; கரைதற்கு என்பதன்
தொகுத்தலாக்கிச், சொல்லுதற் கரிய என்னலுமாம். போர் மிகுதி தோன்றப்
போர்க் கடல் என்றார்;
|