I


மேருவைச் செண்டாலடித்த படலம்615



"வாளமர் நீந்தும் போழ்தின்"

என்பது சிந்தாமணி. போர்க்கடல் என்றமைக் கேற்ப நீர்க்கடல் என்றார். மந்தேகா என்னும் ஒருவகை அரக்கர் ஆதித்தனுடன் பொருது அவன் தேரைத் தடுப்பர் என்று உருவக வகையாற் புராணங் கூறும். (8)

வள்ளறன் குடைக்கீழ்த் தங்கு முயிர்ப்பசி வருத்த மெல்லாங்
கொள்ளைகொண் டிருந்த நெஞ்சிற் குளிர் முகச் செவ்வி குன்றத்
தள்ளருந் துயரின் மூழ்கித் தரையிடைத் துயின்றா னாக
வெள்ளிமன் றுடையார் சித்த வேடராய்க் கனவில் வந்தார்.

     (இ - ள்.) வள்ளல் - உக்கிர வழுதி, தன் குடைக்கீழ் தங்கும் உயிர்
பசிவருத்தம் எல்லாம் - தனது குடைநிழலிற்றங்கிய உயிர்களின் பசி வருத்த
மனைத்தையும், கொள்ளை கொண்டு இருந்த நெஞ்சில் - கவர்ந்து
கொண்டிருந்த உள்ளத்தினால், குளிர்முகச் செவ்வி குன்ற - குளிர்ந்த
முகத்தின் பொலிவு குறைய, தள் அரும் துயரில் மூழ்கித் தரையிடைத்
துயின்றானாக - நீக்குதற் கரிய துன்பக் கடலில் அழுந்தி நிலத்திலே கிடந்து
உறங்கா நிற்க, கனவில் - அவனது கனவின்கண். வெள்ளி மன்று உடையார்
சித்த வேடராய் வந்தார் - வெள்ளியம் பல வாணர் சித்த மூர்த்தியாய்
எழுந்தருளினார் எ - று.

     உயிர்களை யெல்லாம் காத்தற்கு விரையும் பேரருளுடைமை பற்றி
‘வள்ளல்’ என்றார். கொள்ளை கொண்டு - ஏற்றுக் கொண்டு.

"அடுத்தது காட்டும் பளிங்குபோ னெஞ்சங்
கடுத்தது காட்டு முகம்"

என்ப வாகலின் ‘முகச் செவ்விகுன்ற’ என்றார். அணையின்றி வறிதாகிய
தரையிலென்க. (9)

அடற்கதிர் வேலோய் மாரி யரிதிப்போ ததனை வேண்டி
இடர்ப்படல் வரைக்கு வேந்தா யிருக்கின்ற வெரிபொன் மேருத்
தடப்பெரு வரையின் மாடோர் தனிப்பெரு முழையி லிட்டுக்
கிடப்பதோ ரெல்லை யில்லாக் கேடிலாச் சேமவைப்பு.

     (இ - ள்.) அடல் கதில் வேலோய் - வெற்றியை யுடைய ஒளி
பொருந்திய வேற்படை ஏந்திய உக்கிரகுமார, இப்போது மாரி அரிது -
இப்பொழுது மழை பெய்தல் இல்லை (ஆதலால்), அதனை வேண்டி
இடர்ப்படல் - அதனை விரும்பி வருந்தற்க; வரைக்கு வேந்தாய் இருக்கின்ற
- மலைகட்கு அரசாக இருக்கும், எரி பொன் மேருத் தடப்
பெருவரையின்மாடு - விளங்குகின்ற பொன் வடிவாகிய மேரு வென்னும்
மிக்க பெருமையுடைய மலையின் பக்கத்தில், ஓர் தனிப்பெரு முழையில் -
ஒரு ஒப்பற்ற பெரிய குகையில், ஓர் எல்லை இல்லாக் கேடுஇலாச் சேம
வைப்பு இட்டுக் கிடப்பது - ஓர் அளவில்லாத அழியாத சேமநிதி
வைக்கப்பட்டிருக்கின்றது எ - று.

     இடர்ப்படல், அல்லீற்று எதிர்மறை வியங்கோள். தடப்பெரு;
ஒருபொருளிருசொல். இட்டு - இடப்பட்டு. ஓரெல்லையில்லா என்றது