அடைந்து, அது பின்னாக
ஓவி - அம் மலை பின்னாக ஒழித்து,
அப்புறத்துத் தோன்றும் அரி வருடத்தை உற்று - அந்தப் புறத்திற்
காணப்படும் அரி வருட கண்டத்தை அடைந்து எ - று.
இமயமும்
பொன்மலை யெனப்படும். ஓவி - கிழித்தெனப் பிறவினைப்
பொருட்டாய் நின்றது. (21)
உற்றது கழிந்தப் பாற்போய் நிடதவெற் பொழிந்து சம்புப்
பொற்றருக் கனிகால் யாறு போகிளா விருத கண்டத்
துற்றனன் கண்டான் மூன்றூ ரொருங்காடு ஞான்று கூனி
வெற்றிவெஞ் சிலையாய் நின்ற வெற்பினை மலய வெற்பன். |
(இ
- ள்.) உற்றது கழிந்து - அடைந்த அவ்வரி வருட கண்டத்தைக்
கடந்து, அப்பால் போய் நிடத வெற்பு ஒழிந்து - அப்புறஞ் சென்று நிடத
மலையினீங்கி, சம்புப் பொன் தரு கனிகால் யாறு போகு நாவல் மரத்தின் -
பொன்போலும் கனிகள் சிந்தும் சாறாகிய ஆறு செல்லா நின்ற, இளாவிருத
கண்டத்து - இளாவிருத கண்டத்தை, மலய வெள்பன் - பொதியின் மலையை
யுடையவனாகிய உக்கிர பாண்டியன், உற்றனன் - அடைந்து, மூன்று ஊர்
ஒருங்கு அடும்ஞான்று - திரிபுரங்களையும் ஒரு சேர அழிக்குங் காலத்தில்,
கூனி - வளைந்து, வெற்றி வெஞ் சிலையாய் நின்ற வெற்பினைக் கண்டான்
- வெற்றியை யுடைய வெவ்விய வில்லாக நின்ற மேருமலையைக் கண்டான்
எ - று.
உற்றது
: வினையாலணையும் பெயர். சம்புத்தருப் பொற்கனி என
மாறுக. மேல் பதினாறாஞ் செய்யுளிலுள்ள தென்னன் என்பதனோடு மலய
வெற்பன் என்பதனையும் கூட்டி, வெற்பினைக் கண்டான் என முடிக்க;
அச்செய்யுள் முதலாகக் கூறப்பட்ட வினையெச்சங்கள் இம்முற்று
வினைகொண்டு முடியும். இங்கே கூறப்பட்ட கண்டங்கள் முதலியவற்றைக்
கந்தபுராணத்து அண்ட கோசப்படலம் முதலியவற்றானும்
அறிக. (22)
வெம்படைமறவர் சேனை வெள்ளநீத் தேகித் தென்பாற்
சம்புவின் கனியின் சாறு வலம்படத் தழுவி யோடும்
அம்பொனீ ராறு மாற்றி னருகுபொன் மயமாய் நிற்கும்
பைம்புனங் கானு* நோக்கி வளைந்துதென் பால்வந் தெய்தா.
|
(இ
- ள்.) வெம்படை மறவர் சேனை வெள்ளம் நீத்து ஏகி - கொடிய
படையை யேந்திய வீரர்களை யுடைய சேனை வெள்ளத்தை நீக்கித் (தனியே)
சென்று, தென் பால் சம்புவின் கனியின் சாறு - தென் புறத்தில் நின்ற நாவற்
கனியின் சாறானது, வலம்படத் தழுவி ஓடும் அம்பொன் நீர் ஆறும் -
வலமாகத் தழுவி ஓடாநின்ற அழகிய பொன் மயமாகிய நீர் நிறைந்த
ஆற்றையும், ஆற்றின் அருகுபொன் மயமாய் நிற்கும் - அந் நதியின்
அருகில் பொன்மயமாய் நிற்கும், பைம்புனம் கானும் நோக்கி - பசிய
கொல்லைகளையுங் காட்டையும் பார்த்து, வளைந்து - சூழ்ந்து, தென்பால்
வந்து எய்தா - அந்நாவல் மரம் நின்ற தென்பக்கத்தை வந்தடைந்து எ - று.
(பா
- ம்.) * கான நோக்கி.
|