சேனை வெள்ளத்தை
நிறுத்தித் தனியே சென்றென்க. சம்புவின் : வடசொல்
லாகலின் உகரங் கெடாது நின்றது. புனத்தையும் கானையும் என விரிக்க.
(23)
அவ்வரை யரசை
நோக்கி வரைகளுக் கரசே யெந்தை
கைவரி சிலையே பாரின் களைகணே யளவில் வானந்
தைவரு சுடருங் கோளு நாள்களுந் தழுவிச் சூழுந்
தெய்வத வரையே மேலைத் தேவரா லயமே யென்னா. |
(இ
- ள்.) அவ்வரை அரசை நோக்கி - அம் மேருமலைத்
தலைவனை நோக்கி, வரைகளுக்கு, அரசே, மலைகளனைத்திற்கும் வேந்தே,
எந்தை கைவரி சிலையே - எம் தந்தையாகிய சிவபெருமானது
திருக்கரத்திலுள்ள கட்டமைந்த வில்லே, பாரின் களைகணே - நிலவுலகின்
ஆதாரமே, அளவு இல் வானம் தைவரு - அளவிறந்த வானை அளாவி
வருகின்ற, சுடரும் - சூரிய சந்திரரும், கோளும் - நாள்களும் - ஏனைக்
கோள்களும் - நாண் மீன்களும், தழுவிச் சூழுந் தெய்வத வரையே -
பொருந்திச் சூழ்ந்து வருகின்ற தெய்வத்தன்மையுடைய மலையே, மேலைத்
தேவர் ஆலயமே என்னா - வானுலகிலுள்ள தேவர் வசிக்குங் கோயிலே
என்று எ - று.
(புவியைத்
தாங்குதலின் பாரின் களைகண் என்றார்; பூதரம் என்னும்
பெயரும் நோக்குக. சுடரெனப் பிரித்தமையால் கோள் என்றது ஞாயிறு
திங்கள் ஒழிந்தவற்றை. இருபத்தேழு நாண் மீன்களும் ஏனை விண்மீன்களும்
நாள்கள் எனப்பட்டன. கோளும் நாளும் முதலியன சூழ்ந்து வருதலையும்,
மேருவானது தேவர்களுக்கு இருப்பிடமாதலையும் கந்தபுராணம்
முதலியவற்றா னறிக. (24)
மாணிக்க மிமைக்கும் பூணான் விளித்தலும் வரைக்கு வேந்தன்
பாணித்து வரவு தாழ்ப்பப் பாகசா தன்னை வென்றோன்
நாணித்தன் சினமு மேரு நகைவரைச் செருக்கு மாறச்
சேணுற்ற சிகரந் தன்னிற் செண்டினா லடித்து நின்றான். |
(இ
- ள்.) மாணிக்கம் இமைக்கும் பூணான் விளித்தலும் -
மாணிக்கங்கள் ஒளி வீசும் அணியை யணிந்த உக்கிரவழுதி இவ்வாறு
அழைத்தலும், வரைக்கும் வேந்தன் வரவு பரணித்துத் தாழ்ப்ப - அம்
மலையரசனது வருகை காலம் நீட்டித்துத் தாழ்த்தமையால், பாகசாதனனை
வென்றோன் - இந்திரனை வென்ற அப் பாண்டியன், நாணி - நாணமுற்று,
தன் சினமும் நகை மேருவரைச் செருக்கும் மாற - தன் வெகுளியும்
விளங்குகின்ற மேரு மலையின் தருக்கும் நீங்குமாறு, சேண் உற்ற சிகரம்
தன்னில் செண்டினால் அடித்து நின்றான் - வானை யளாவிய (அம்
மலையின்) முடியில் செண்டினாற் புடைத்து நின்றான் எ - று.
(பாணித்தலும்
தாழ்த்தலும் ஒரு பொருளன. வரவு தாழ்ப்ப என்பதை
ஒரு சொல்லாகக் கொண்டு, வேந்தன் தாழ்க்க என்னலுமாம். தான் புகழ்ந்
துரைத்து அழைக்கவும் வந்திலாமையால் நாணும் சினமும் உளவாயின. (25)
|