I


மேருவைச் செண்டாலடித்த படலம்623



அடித்தலு மசையா மேரு வசைந்துபொற் பந்து போலத்
துடித்தது சிகர பந்தி சுரர்பயில் மாடப் பந்தி*
வெடித்தன தருண பானு மண்டலம் விண்டு தூளாய்ப்
படித்தலை தெறித்தா லென்னப் பன்மணி யுதிர்ந்த வன்றே.

     (இ - ள்.) அடித்தலும் அசையாமேரு அசைந்து பொன் பந்து
போலத்துடித்தது - (அங்ஙனம்) அடித்த வளவில் ஒருகாலும் சலியாத
மேருமலையானது சலித்துப் பொன்னாற் செய்த பந்து (துடித்தாற்) போலத்
துடித்தது; சிகரபந்தி சுரர் பயில் மாடப்பந்தி வெடித்தன - முடிவரிசைகளும்
தேவர்கள் வசிக்கும் மாடவரிசைகளும் வெடித்தன; தருணபானு மண்டலம்
விண்டு தூளாய்ப் படித்தலை தெறித்தால் என்ன - இளஞாயிற்றின் மண்டலம்
பிளந்து தூளாகிப் புவியிற் சிந்தினாற்போல, பல் மணி உதிர்ந்த - பல
மணிகளும் சிதறின எ - று.

     அசைவின்மையால் மலை அசலம் எனப்படும்; ஏனை மலைகள்
அசையினும் அசையாத வென்க; நிலத்தில் அடித்த பந்து துள்ளுதல்போல.
பொன் வரையாகலின் பொற்பந்துபோல வென்றார். தருணம் - இளமை.
அன்று, : அசைகள். (26)

புடைவரைக் குலங்களெட்டும் புறந்தழீஇக் கிடக்குஞ் செம்பொன்
அடைகலோர் நான்கு நான்கு கிடங்கரு மலர்ந்த நான்கு
தடமலர்ப் பொழிலு நான்கு தருக்களுஞ் சலித்த வம்மா
உடையவ னிடையூ றுற்றா லடுத்தவர்க் குவகை யுண்டோ.

     (இ - ள்.) புடைவரைக் குலங்கள் எட்டும் - (மேருவின்) பக்கத்திற்
சூழ்ந்த குல மலைகள் எட்டும், புறம் தழீஇ கிடக்கும் செம்பொன் அடைகல்
ஓர் நான்கும் - நான்கு புறங்களிலும் தழுவிக் கிடக்கும் செம்பொன்
வடிவாகிய பக்க மலைகள் நான்கும், நான்கு கிடங்கரும் - கிடங்குகள்
நான்கும், அலர்ந்த நான்கு தடமலர்ப் பொழிலும் - மலர்ந்த பெரிய
பூம்பொழில் நான்கும், நான்கு தருக்களும் சலித்த - மரங்கள் நான்கும்
நடுங்கின; உடையவன் இடையூறு உற்றால் - தலைவன் துன்ப முற்றானாயின்,
அடுத்தவர்க்கு உவகை உண்டோ - (அவனைச்) சார்ந்தவர்களுக்கு மகிழ்ச்சி
உண்டாகுமோ (ஆகாது) எ - று.

     அடைகல் - ஆதாரமாய் அடுத்த கல். கிடங்கர் : ஈற்றுப் போலி.
அம்மா : அசை. வரைகள் எட்டு - தெற்கில் நிடதம், ஏமகூடம், இமயம்.
வடக்கில் நீலம், சுவேதம், சிருங்கம்; மேற்கில் கந்தமாதனம்; கிழக்கில்
மாலியவான். அடைகல் நான்கு - கிழக்கில் மந்தரம், தெற்கில் கந்தமாதனம்,
மேற்கில் விபுலம், வடக்கில் பார்சுவம், கிடங்கர் நான்கு - கிழக்கில்
அருணவோடை, மேற்கில் அசிதோத வோடை, தெற்கில் மானத வோடை,
வடக்கில் மாமடு வோடை. பொழில் நான்கு - கிழக்கில் சயித்திரதம்,
தெற்கில் நந்தனம், மேற்கில் வைப்பிரசம், வடக்கில் திருதாக்கியம். தருநான்கு
- கிழக்கில் கடம்பு, தெற்கில் நாவல், மேற்கில் அரசு, வடக்கில் ஆல். இவை
யெல்லாம் கந்தபுராணத்து அண்ட கோசப் படலத்திற் கூறப்பட்டுள்ளன. இச்
செய்யுள் வேற்றுப் பொருள் வைப்பணி. (27)


     (பா - ம்.) * மாடபந்தி