I


மேருவைச் செண்டாலடித்த படலம்627



தன் தானையோடும் - திரும்பித் தன் சேனையோடும், தென் திசை நோக்கி
- தெற்குத்திசையை நோக்கி, மான் தடம்தேர் பாகன்செலுத்த ஊர்ந்து -
குதிரை பூண்ட பெரிய தேரினைப் பாகன் செலுத்தாநிற்க ஏறிச்சென்று, பொன்
திகழ் வரையும் போக பூமியும் பிறவும் நீத்து - விளங்கும் பொன் மலையாகிய
மேருவையும் போக பூமியையும் மற்றுள்ள நாடுகளையும் துறந்து, நன்றி கொள்
மனிதர் வைப்பில் நண்ணுவான் - நன்மையைக் கொண்ட மக்கள் வசிக்கும்
நாட்டின்கண் வருவானாயினன்; நணுகும் எல்லை - அங்ஙனம் வரும்
பொழுது எ - று.

     மின் - ஒளியுமாம். (34)

மாத்திமர் விராட மன்னர் மாளவர் தெலுங்க தேயப்
பார்த்திபர் பிறருந் தத்தம் பதிதொறும் வரவுநோக்கித்
தேர்த்திக ழனிகத் தோடுஞ் சென்றெதிர் முகமன் செய்யத்*
தார்த்திரு மார்பன் கன்னித் தண்டமிழ் நாடு சார்ந்தான்.

     (இ - ள்.) மாத்திமர் விராட மன்னர் மாளவர் தெலுங்க தேயப்
பார்த்திபர் பிறரும் - மத்திம நாட்டு மன்னரும் விராடநாட்டு மன்னரும்
மாளவநாட்டு மன்னரும் தெலுங்க நாட்டு மன்னரும் ஏனை மன்னர்களும்,
தத்தம் பதிதொறும் - தம் தம் நகரங்கள் தோறும், வரவு நோக்கி - (தனது)
வருகையை எதிர்நோக்கி, தேர்திகழ் அனிகத் தோடும் சென்று எதிர் முகமன்
செய்ய - தேருடன் விளங்கும் சேனைகளோடும் கென்று எதிர்கொண்டு
உபசாரஞ் செய்ய (அதனையேற்று), தார் திருமார்பன் - மாலை யணிந்த
அழகிய மார்பினையுடைய உக்கிர குமாரன் தண் தமிழ் கன்னி நாடு
சார்ந்தான் - தண்ணிய தமிழ் (வழங்கும்) பாண்டி நாட்டை அடைந்தான்
எ-று.

     மாத்திமர் முதலியவற்றில் எண்ணும்மை விரிக்க. எதிர் - எதிர்
கொண்டென்க. கன்னித் தமிழ் - அழியாத தமிழ், இளமை மாறாத தமிழ்
எனத் தமிழுக்கு அடையாக்கலுமாம். (35)

கன்னிப்பொன் னெயில்சூழ் செம்பொற் கடிநகர்க் கணிய னாகிப்
பொன்நிற்செய் திழைத்த நீள்கோ புரத்தினைக் கண்டு தாழ
உன்னித்தே ரிழிந்தெட் டோடைந் துறுப்பினாற் பணிந்தெழுந்து
வன்னிச் செஞ்சுடர்க்க ணெற்றி மன்னவன் மதுரை சார்ந்தான்.

     (இ - ள்.) கன்னிப் பொன் எயில் சூழ் செம் பொன் கடி நகர்க்கு
அணியனாகி - அழியாத பொன்னாலாகிய மதில்சூழ்ந்த செம்பொன் நிறைந்த
காவலையுரடய மதுரைப் பதிக்கு அணிமையனாகி, பொன்னிற் செய்து
இழைத்த நீள் கோபுரத்தினைக் கண்டு தாழ உன்னி - பொன்னாற் செய்து
இழிந்து - தேரினின்றும் இறங்கி, எட்டோடு ஐந்து உறுப்பினால் பணிந்து
எழுந்து, நெற்றி செஞ்சுடர் வன்னி கண் மன்னவன் மதுரை சார்ந்தான் -
நெற்றியில் செவ்வொளி பொருந்திய அழற்கண்ணை யுடைய சோமசுந்தரக்
கடவுளின் மதுரையை அடைந்தான் எ - று.
     


(பா - ம்.) * முகமன் செப்பத்.