செய்திழைத்த
: ஒருபொருள் குறித்தனவுமாம். எட்டுறுப்பும் ஐந்துறுப்பும்
தோயப் பணிந்தென்க. (36)
அறத்துறை
யந்த ணாளர் துறந்தவ ரரன்றாள் பற்றிப்
புறத்துறை யகன்ற சைவ பூதியர் புனிதன் கோயிற்
றிறத்துறை யகத்துத் தொண்டர் திரண்டெதிர் கொள்ள முத்தின்
நிறத்துறை வையை நீத்து நெடுமதில் வாயில் புக்கான். |
(இ
- ள்.) அறத்துறை அந்தணாளர் - அறநெறியிற் பிழையாத
அந்தணர்களும், துறந்தவர் துறவிகளும், அரன் தாள் பற்றி புறத்துறை
அகன்ற சைவ பூதியர் - சிவபிரான் திருவடியைப் பற்றிக் கொண்டு புறமாகிய
நெறிகளின் நீங்கிய சைவப்பெருவாழ்வினரும், புனிதன் கோயில் திறத்துறை
அகத்துத் தொண்டர் - சோமசுந்தரக் கடவுளின் திருக்கோயிலிற் பூசனை
வகைகளை நடத்தும் அகத்தொண்டர்களும், திரண்டு எதிர் கொள்ள -
ஒருங்கு கூடி எதிர் கொள்ள, முத்தின் நிறத்துறை வையை நீத்து நெடுமதில்
வாயில் புக்கான் - முத்துக்களின் ஒளி விளங்கும் நீர்த்துறைகளை யுடைய
வையை யாற்றினைக் கடந்து நீண்ட மதில் வாயிலிற் புகுந்தான் எ - று.
புறத்துறை
- பாவநெறி;
"முதல்வன் பாதமே
பற்றா நின்றாரைப் பற்றா பாவமே" |
என்னும் தமிழ்த்
திருமறையுங் காண்க. பூதி - செல்வம். திறம் - நித்தம்
நைமித்திகம் முதலியன. (37)
கொங்கலர்
கோதை மாதர் குங்குமம் பனிப்பச் சிந்தும்
மங்கல மறுகி னேகி மறைகள்சூழ் கோயி லெய்தித்
தங்கணா யகனைச் சூழ்ந்து தாழ்ந்தெழுந் தேத்திப் போந்து
திங்களூர்* குடுமிச் செல்வத் திருமணிக் கோயில் புக்கான். |
(இ
- ள்.) கொங்கு அலர் கோதை மாதர் - மணம் பரந்த கூந்தலை
யுடைய மகளிர்; குங்குமம் பனிப்பச் சிந்தும் மங்கல மறுகின் ஏகி - குங்கும
நீரைக் குளிரச் சிந்திய மங்கல நிறைந்த வீதியிற் சென்று, மறைகள் சூழ்
கோயில் எய்தி - வேத ஒலி சூழ்ந்த திருக்கோயிலை யடைந்து, தங்கள்
நாயகனைச் சூழ்ந்து - தங்கள் தலைவனாகிய சோம சுந்தரக் கடவுனை
வலம்வந்து, தாழ்ந்து எழுந்து ஏத்தி - வணங்கி எழுந்து துதித்து, போந்து -
சென்று திங்கள் ஊர் குடுமிச் செல்வத் திருமணிக் கோயில் புக்கான் -
சந்திரன் ணிகள் இழைத்த (தனது) கோயிலை யடைந்தான் எ - று.
கோதை
- மாலையுமாம். (38)
(பா
- ம்.) * திங்கள் சூழ்.
|