வருகிற மெல்லிய தென்றற்காற்று
வீசப்பெற்று, திருமுகத்திடை மடுக்கவும் -
(அதனைத் தனது) திருமுகத்தின்கண் ஏற்கவும், தமிழ் திருச்செவி மாந்தவும்
அன்றோ - தமிழின் சுவையைத் திருச்செவியால் நுகரவும் அல்லவா எ - று.
தென்றிசை
- தெற்கின்கண்ணதாய தமிழ்நாடு; மாதவஞ் செய்த
தென்றிசை வாழ்ந்திடத், தீதிலாத் திருத்தொண்டத் தொகைதரப் போதுவார்
எனப் பெரியபுராணங் கூறுதலுங் காண்க. இறைவன்
திருக்கைலை
முதலியவற்றை விடுத்துத் தமிழ்நாட்டிலே திருநடம்புரிவதும்,
தமிழ்நாட்டினுள்ளம் திருவாலங்காடு, சிதம்பரம், மதுரை, திருநெல்வேலி,
திருக்குற்றாலம் என்பவற்றில் முறையானே நெருங்கி வந்தாடுவதும் என்பார்
தென்றிசை நோக்கி அடுக்கவந்து வந்தாடுவான் என்றார். தெற்கு
நோக்கியாடுதலுங் கொள்க. தமிழ் திருச் செவிமாந்தவும் என்றது, வேறெம்
மொழிக்குமில்லாத அதன் இனிதை கருதி யென்க. அடுக்கு உவமை
குறித்தது; வந்து உவந்து எனப் பிரித்தலும் ஆம். வீசி - வீசப்பட்டு.
கண்டனும் : உம் உயர்வு சிறப்பு. ஆடுவான் என்பது தொழிற்பெயராற்
நின்றது : தற்குறிப் பேற்றவணி. (55)
விடையு கைத்தவன் பாணினிக் கிலக்கண மேனாள்
வடமொ ழிக்குரை தாங்கியல் மலயமா முனிக்குத்
திடமு றுத்தியம் மொழக்கெதி ராக்கிய தென்சொல்
மடம கட்கரங் கென்பது வழுதிநா டன்றோ. |
(இ
- ள்.) விடை உகைத்தவன் - இடபவாகனத்தைச் செலுத்துகின்ற
சிவபெருமான், மேல்நாள் - முன்னொருகாலத்திலே, பாணினிக்கு -
பாணினிமுனிவனுக்கு, வடமொழிக்கு இலக்கணம் உரைத்தாங்கு - சமஸ்கிருத
மொழிக்கு வியாகரண சூத்திரத்தை அருளிச் செய்ததுபோல, மலயம்
மாமுனிக்கு - பொதியின் மலையிலுள்ள பெருமை பொருந்திய அகத்திய
முனிவனுக்கு, இயல் திட முறுத்தி - தமிழிலக்கணத்தைத் திடம்பெற
அறிவுறுத்தி, அம் மொழிக்கு - அவ் வடமொழிக்கு, எதிர் ஆக்கிய -
எதிர்மொழியாகச் செய்த, தென் சொல் மடமகட்கு - தென்மொழியாகிய
தமிழ் நங்கைக்கு, அரங்கு என்பது - நடனசாலையென உணர்ந்தோரால்
புகழ்ந்து கூறப்படுவது, வழுதிநாடு அன்றோ - பாண்டி நாடு அல்லவா
எ - று.
பாணினி
என்பவர் காந்தாரநாட்டிலே சலாது நகரத்திலே பாணினி
என்பானுக்குத் தாக்ஷி என்பாள் வயிற்றுப்பிற இளமையிலே மந்தமதி
யுடையானென ஆசிரியனாலும் பிறராலும் அவமதிக்கப்பட்டுப் பின் சிவனை
நோக்கித் தவம்புரிந்து மகேசுவர சூத்திர உபதேசம் பெற்றுப் பலகலையினும்
வல்லவராகி வடமொழிக்குச் சிறந்த தோரிலக்கணம் இயற்றின ரென்ப.
இவரிற்றிய வியாகரணம் பாணினீயம் எனப்படும். இதனைக் காசுமீர நாட்டின்
அரசனாகிய கானிட்களது அவைக்களத்தே அரங்கேற்றின ரென்பர்.
இந்நூலுக்கு உரை கண்டவர்கள் வரருசியும், பதஞ்சலியுமாவர். பாணினியின்
காலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதெனச் சிலரும், நாலாயிரம்
ஆண்டுகளுக்கு முற்பட்டதெனச் சிலரும் கூறாநிற்பர். எங்ஙனமாயினும் பாரத
இராமாயண காலங்களுக் கெல்லாம் முன்னரே தென் மதுரை யகத்துத்
|