"விண் முதல்
பூதலம்
ஒன்றியி விருசுட ரும்பர்கள் பிறவும்
படைத்தளித் தழிப்பமும் மூர்த்திக ளாயினை" |
என்பது
திருவெழுகூற்றிருக்கை; சிவஞானபோத முதற் சூத்திரமும்,
"அவனவ ளதுவெனும்
அவைமூ வினைமையின்" |
என்று கூறிற்று. பராபரம்;
பரஞசுடர் என்னும் இருதொகைகள் ஒருதொடராய்த
தொக்கன. முண்டகத்தினுள்ளிருந்து வெளிப்பட்டமை கருதி வண்டுபோல்
என்றார். உண்டு அளித்த வெனக் கூட்டுக. (3)
பிரவண முதித்த ததனிடை வேதம்
பிறந்தன நைமிசா ரணியத்
தருணிறை முனிவர் கண்ணுவர் கருக்க
ராதியோ ரதிகரித் தவற்றின்
பொருணிலை தெரியா துள்ளமு முகமும்
புலர்ந்தன ரிருப்பவப் போதத்
திருண்மல வலிவென் றவனர பத்த
னென்றொரு வேதியன் வந்தான். |
(இ
- ள்.) பிரணவம் உதித்தது - பிரணவந் தோன்றியது; அதனிடை
வேதம் பிறந்தன - அதனிடத்து மறைகள் தோன்றின; நைமி சாரணியத்து
அருள் நிறை முனிவர் கண்ணுவர் கருக்கர் ஆதியோர் - நைமிசாரணியத்தில்
உள்ள கருணை நிறைந்த முனிவராகிய கண்ணுவர் கருக்கர் முதலியோர்,
அதிகரித்து - பயின்று, அவற்றின் பொருள் நிலை தெரியாது -
அம்மறைகளின் உட்கிடையாகிய பொருளை உணராமல், உள்ளமும் முகமும்
புலர்ந்தனர் இருப்ப - மனமும் முகமும் வாடி யிருக்க, அப்போதத்து -
அப்பொழுது, இருள் மலவலி வென்றவன் - ஆணவ மலத்தின் சத்தியை
வென்றவனாகிய, அரபத்தன் என்று ஒரு வேதியன் வந்தான் - அரபத்தன்
என்னும் பெயரினையுடைய ஒருமுனிவன் வந்தான் எ - று.
அதிகரித்து
- கற்று என்னும் பொருட்டு. புலர்ந்தனர் என்பது வினை
யெச்சமும், வென்றவன் என்பது பெயரெச்சமும் ஆயின. அப்போதத்து,
அத்து : சாரியை. ஆதியோ ரோதலுற்று என்று பாடங் கொண்டாரு முளர்.
(4)
வந்தவே தியனை யிருந்த வேதியர்கள்
வரவெதிர்ந் திறைஞ்சிவே றிருக்கை
தந்தவே லையிலம் மறையவன் முனிவர்
தமைமுக நோக்கியீ துரைப்பான்
பந்தவே தனைசா லவாவெறுப் பிகந்த
பண்பின ராயினீர் நீவிர்
சிந்தைவே றாகி முகம்புலர்ந் திருக்குஞ்
செய்தியா தெனவவர் சொல்வார். |
|