I


634திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



     (இ - ள்.) வந்த வேதியனை இருந்த வேதியர்கள் வரவு எதிர்ந்து -
(அங்ஙனம்) வந்த முனிவனை இருந்த முனிவர்கள் வரவேற்று, இறைஞ்சி -
வணங்கி, வேறு இருக்கை தந்த வேலையில் - வேறு ஆதனம் அளித்த
பொழுது, அம் மறையவன் - அம் முனிவன், முனிவர் தமை முகம் நோக்கி
ஈது உரைப்பான் - கண்ணுவர் முதலிய முனிவர்கள் முகத்தை நோக்கி
இங்ஙனம் கூறுவான் : நீவிர் பந்த வேதனை சால் அவர் வெறுப்பு இகந்த
பண்பினர் ஆயினீர் - நீங்கள் பந்த வேதனையும் மிக்க விருப்பு வெறுப்பும்
நீங்கிய தன்மையினரா யிருந்தும், சிந்தை வேறாகி முகம் புலர்ந்து இருக்கும்
செய்தியாது என - மனம் வேறுபட்டு முகம்வாடி இருக்கும் செய்தியாது என்று
வினவ, அவர் சொல்வார் - அம் முனிவர்கள் கூறுவார்கள் எ - று.

     முகநோக்கி யென்பது ஒரு சொல்லாய் இரண்டாவதற்கு முடிபாயிற்று.
இங்ஙனம் உரைப்பான், எங்ஙனம் எனின் செய்தியாதென்று கூற வென்ற.
பந்தவேதனை - கட்டினாகிய துன்பம்; வேதனை யமைந்த அவாவெறுப்
பென்னலுமாம். ஆயினீர் - ஆகியும். (5)

மருட்படு மாயை கழிந்தவன் மொழிந்த
     மறைபயின் றுரைசெய்தே சிகனற்
றிருட்படு மனத்தே மிருத்துமா லைய
     யாதுசூ ழிதற்கெனக் கேட்ட
தெருட்படு மனத்தோன் செப்புவான் தேவஞ்
     செப்பிய சிவபரஞ சுடரே
அருட்படி வெடுத்துப் பொருளையு முணர்த்து
     மல்லது சூழ்ச்சியா தறைவீர்.

     (இ - ள்.) ஐய - ஐயனே, மருள் படு மாயை கழிந்தவன் - மயக்கத்திற்
கேதுவாகிய மாயையை இயல்பாகவே நீங்கிய இறைவன், மொழிந்தமறை
பயின்று - திருவாய் மலர்ந்தருளிய வேதங்களை ஓதி, உரைசெய் தேசிகள்
அற்று - அவற்றின் பொருளை உணர்த்தும் குரவனில்லாமல், இருள்படு
மனத்தேம் இருத்தும் - அஞ்ஞானம் நிறைந்த மனத்தையுடையேமாக
இருக்கின்றேம் (ஆதலால்), இதற்குச் சூழ் யாது என - இதற்கு ஆலோசனை
யாது என்று வினவ, கேட்ட தெருள்படு மனத்தோன் செப்புவான் - அதனைக்
கேட்ட தெளிவு பொருந்திய மனத்தையுடைய அரபத்தன் கூறுகின்றான்;
வேதம் செப்பிய சிவபரஞ் சுடரே - அம் மறைகளைக் கூறியருளிய சிவபரஞ்
சோதியே, அருள் படிவு எடுத்து - அருளுருக் கொண்டு, பொருளையும்
உணர்த்தும் - பொருளையும் அறிவிக்கும்; அல்லது சூழ்ச்சி யாது அறைவீர்
- அஃதன்றி வேறு ஆலோசனை யாது உளது சொல்வீர் (எனக் கூறி) எ - று.

     மாயை மயக்கத்திற்கேது வென்பதனை.

"வைத்ததோர் மலமாய் மாயை
மயக்கமுஞ் செய்யு மன்றே"

என்னும் சிவஞான சித்தியாலறிக. மாயை கழிந்தவன் - மாயைக்கு அப்பாற்
பட்டவன் எனலுமாம். இருத்தும் - இருக்குதும் : தன்மைப் பன்மை முற்று;
தும் விகுதி நிகழ் காலத்தில் வந்தது. ஆல் : அசை. உணர்த்து மல்லது
என்பதற்கு உணர்த்தினன்றி என்றுரைத்தலுமாம். (6)