I


வேதத்துக்குப் பொருளருளிச் செய்த படலம்637



பங்கவன் மதுரைப் பதிபுகுந் தம்பொற்
     பன்மணிக் கோயில்புக் காழிச்
சங்கவன் கைபோல் வளைசெறி செம்பொற்
     றாமரைத் தடாகநீ ராடி.

     (இ - ள்.) அவன் திருமுன் அருந்தவ விரதம் ஆற்றுவான் அங்கு
செல்லுமின் என - அந்த மூர்த்தியின் திருமுன்னர் இருந்து அரிய தவமாகிய
நோன்பைச் செய்தற்கு அங்கே செல்லுங்கள் என்று கூற, அப் புங்கவன்
அருள்போல் வந்த மாதவன் பின் - அந்தத் தேவனது திருவருளே போலும்
வந்த மாதவனாகிய அரபத்தன் பின்பு, புனிதம் மாமுனிவரும் - தூய
பெருமையுடைய முனிவர்களும், நங்கை பங்கவன் மதுரைப் பதி புகுந்து -
உமையொரு பாகனாகிய சோமசுந்தரக் கடவுளின் மதுரைப்பதியிற்சென்று,
அம்பொன் பல்மணிக் கோயில் புக்கு - அழகிய பொன்னாற் செய்த பல்வகை
மணிகள் இழைத்த திருக்கோயிலுட்புகுந்து, ஆழிச் சங்கவன் கைபோல் -
திகிரிப்படையை யுடைய திருமாலின் சங்கை ஏந்திய கைபோல, வளைசெறி
செம்பொன் தாமரைத் தடாகம் நீராடி - சங்கு பொருந்திய சிவந்த பொற்றா
மரையையுடைய வாவியில் நீராடி எ - று.

     மாதவன் பின் என்றமையால் அவனும் சென்றா னென்பது பெறப்பட்டது. இறைவனை வழிபடுதற்கு அம்முனிவன் அழைத்துச் செல்லுதலை அவனது
அருளேவந்து ஈர்த்துச் செல்வது போலும் என உவமை கூறியது சாலவும்
பொருத்த முடைத்து;

"அவனரு ளாலே யவன்றாள் வணங்கி"

என்று திருவாசகத் திருமறை அருளிச்செய்தல் காண்க. பங்கவன் : வகரம்
விரித்தல். ஆழியான் சங்கக் கைபோல் என விகுதி பிரித்துக் கூட்டுக. சங்கு
தாமரை மேல் இருக்குமென்றார்;

"முட்டாட் டாமரை முறுக்கவிழ் மலர்மேல்
வலம்புரி கிடக்கும் வாதவூ ரன்ப."

என நால்வர் நான்மணி மாலை கூறுவதுங் காண்க. (10)

கரைகடந் துள்ளங் கடந்தவன் புந்தக்
     கடிதுபோய் நான்கிரு வெள்ளி
வரைகடம் பிடரிற் கிடந்ததோர் மேரு
     வரைபுரை விமானமேற் காணா
உரைகடம் பொருளைக் கண்களாற் கண்டாங்
     கும்பர்தம் பிரானைநேர் கண்டு
திரைகடந் திடும்பே ரின்பவா ரியிலுஞ்
     சேணிலத் திலும்விழுந் தெழுந்தார்.

     (இ - ள்.) கரை கடந்து உள்ளம் கடந்த அன்பு - எல்லையின்றி
உள்ளத்தை விழுங்கி எழுந்த அன்பானது, உந்த - செலுத்த, கடிது போய் -