கர சரணம் : வடசொற்றொடர்,
கம்பிதம் செய்து - கம்பித்து; நடுங்கி.
கம்பித்தல் முதலியன அன்பின் நிகழ்ச்சிகள். சினை வினைகள் முதன்மேல்
நின்றன. இன்னமுந் தேறா என்றது,
"தேவரு மறையு
மின்னமுங் காணாச்செஞ்சடைக் கடவுளைப் பாடி
யாவது மதித்தோர் மூவரி லிருவர் பிறந்தநா டிந்தநன் னாடு." |
என்னும் வரந்தருவார்
கூற்றை நினைவுறுத்துகிறது. பிரமன் மால்
தேறாமையும் மன்றிலாடுதலும் ஒருங்கு கூறியிருப்பது,
"மன்றுளே மாலயன்
றேட
ஐயர்தாம் வெளியே யாடுகின்றாரை." |
என்னும் அருண்மொழித்
தேவர் திருவாக்கைச் சிந்திக்கச் செய்கின்றது.
ஏனோர்க்கு அமுதளித்துத் தான் நஞ்சுண்ட பெருந் தகைமை யாளன்
என்பதுபற்றி உத்தம என்றார்."எங்களுத்தமனே"
என்பர் வாதவூரடிகள்.
(12)
மறைபொருள் காணா துள்ளமா லுழந்து
வாடிய வெமக்குநி யேயந்
நிறைபொரு ளாகி நின்றனை யதற்கு
நீயலாற் பொருள்பிறி தியாதென்
நிறைவனை யிறைவன் பங்கிலங் கயற்க
ணிறைவியை யம்முறை யேத்தி
முறைவலஞ் செய்து வடநிழ லமர்ந்த
மூர்த்திமுன் னெய்தினார் முனிவோர். |
(இ
- ள்.) முனிவோர் - கண்ணுவர் முதலிய அம்முனிவர்கள்,
மறைபொருள் காணாது - (மறைகளின்) மறைந்த பொருளைக் காண
மாட்டாது, உள்ளம் மால் உழந்து வாடிய எமக்கு - உள்ளம் மயங்கி வாடிய
எமக்கு, நீயே அ நிறை பொருள் ஆகி நின்றனை - நீயே அம் மறையின்
நிறைந்த பொருளாகி நின்றாய், அதற்கு நீ அலால் பிறிது பொருள் யாது
என்று - அம்மறைக்கு நின்னை யல்லால் வேறுபொருள் யாதென்று,
இறைவனை (ஏத்தி) - சொக்கலிங்கக் கடவுளைத் துதித்து, இறைவன் பங்கில்
அங்கயற்கண் இறைவியை அம்முறை ஏத்தி - அப் பெருமானது ஒரு
பாதியிலமர்ந்த அங்கயற்கண் ணம்மையையும் அங்ஙனமே துதித்து,
முறைவலம் செய்து - முறையாக வலம் வந்து, வடநிழல் அமர்ந்த மூர்த்தி
முன் எய்தினார் - கல்லாலின் நிழலிலமர்ந் தருளிய தட்சிணா மூர்த்தியின்
திருமுன்னர் அடைந்தார்கள் எ - று.
மறைந்த
பொருளுடைமையால் மறையெனப்படுதலைத் தொல்காப்பியப்
பாயிரத்தில் "நான்மறை" என்பதற்கு நச்சினார்க்கினியர்
கூறிய
உரையானுமறிக. நீயே அந்நிறை பொருளாகி நின்றனை என்ற கருத்தை,
"மறையுமாம் மறையின்
பொருளுமாய் வந்தென
மனத்திடை மன்னிய மன்னே." |
|