தலைச்சங்கப் புலவராய்த்
திகழ்ந்த ஆசிரியர் அகத்தி யனார்க்குப் பாணினி
மிகவும் பிற்பட்டவரென்பதுதேற்றம். எனவே சிவபெருமான் பாணினிக்கு
முதற்கண் இலக்கணம் அறிவுறுத்திப் பின்பு அகத்தியர்க்கு அறிவுறுத்தின
ரென்பது சிறிதும் பொருந்தாது ஆகலின் மேனாள் என்பதற்கு முன்னொரு
காலத்தில் எனப் பொது வகையாகப் பொருள் கொள்ளப்பட்டது. இப்
புராணமியற்றிய ஆசிரியரும் இவரனைய பிறரும் பாணினீயத்தையே
முற்பட்டதாகக் கொண்டனரெனினும், இன்னோர் சரித்திர ஆராய்ச்சியைப்
பொருளாகக் கொண்டவரல்ல ராகலின் இவர்கள் கூற்று இவ்வுழித் தவறென
எடுத்துக்காட்டுதலால் இவர் பெருமைக்கு இழுக்கொன்று மின்றென்க.
அகத்தியர் சிவபெருமானிடத்தே தமிழ் கேட்டதனை,
"உழக்குமறை நாலினு முயர்ந்துலக
மோதும்
வழக்கினு மதிக்கவியி னும்மரபி னாடி
நிழற்பொலி கணிச்சிமணி நெற்றியுமிழ் செங்கண்
தழற்புரை சுடர்க்கடவு டந்ததமிழ் தந்தான்" |
என்று கம்பருங்
கூறியுள்ளார்.
பரத
கண்டத்தின் தெற்கிலே தமிழும், வடக்கிலே ஆரியமும் சிறந்து
விளங்கினமையின் இவற்றை முறையே தென்மொழி, வடமொழி யென்பர்.
திடமுறுத்தி - உறுதிபெற அறிவுறத்தி. சேர, சோழ மண்டலங்களும் தமிழ்
நாடேயாயினும், பல்லாயிரம் ஆண்டுகள் சங்கமிருந்து தமிழாராய்ந்தது
பாண்டிநாடாகலின், அதனையே அரங்கென்றார். மடம் - மென்மை. (56)
கண்ணு தற்பெருங்
கடவுளுங் கழகமோ டமர்ந்து
பண்ணு றத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமி ழேனை
மண்ணி டைச்சில விலக்கண வரம்பிலா மொழிபோல்
எண்ணி டைப்படக்* கிடந்ததா வெண்ணவம் படுமோ. |
(இ
- ள்.) கண்நுதல் பெரும் கடவுளும் - நெற்றியிற் கண்ணையுடைய
முதற் கடவுளாகிய சிவபெருமானும், கழகமோடு அமர்ந்து - சங்கத்தின்கண்
வீற்றிருந்து, பண்உற - செப்பமுற, தெரிந்து ஆய்ந்த - ஆராய்ந்து தெரிந்த,
இப்பசுந்தமிழ் - இப் பசிய தமிழ்மொழியானது, ஏனை மண்இடை - மற்றை
நிலங்களிலுள்ள, இலக்கண வரம்பு இலா - இலக்கண வரையறை இல்லாத,
சிலமொழிபோல் - சில மொழிகளைப் போல, எண் - இடை - எண்ணின்
கண், படக்கிடந்ததா - அமையக்கிடந்ததாக, எண்ணவும் படுமோ -
நினைக்கவுங் கூடுமோ (கூடாது) எ - று.
சிவபெருமான்
கழகமோடமர்ந்து தமிழாராய்ந்ததனை "தலைச் சங்க
மிருந்தார் அகத்தியனாரும், திரிபுரமெரித்த விரிசடைக்கடவுளும், குன்றெறிந்த
முருகவேளும், முரஞ்சியூர் முடிநாகராயரும், நீதியின் கிழவனும் என
இத்தொடக்கத்தார் ஐஞ்ஞூற்று நாற்பத் தொன்பதின்மர் என்ப" என்னும்
இறையனாரகப்பொருளுரையானும், இப்
புராணத்தின் சங்கப்பலகை
கொடுத்த படலத்தில்,
(பா
- ம்.) * எண்ணிடப்படக்.
|