என்னும் திருவாசகத்தானும்
ஓர்க. ஏத்தி யென்பதனை இறைவனை
யென்பதனோடுங் கூட்டி யுரைக்க. முனிவோர், அகரம் ஓகாரமாதல்
தொல்காப்பியத்து உடம்பொடு புணர்த்தலாற் கொள்க. (13)
சீதளப் பளிக்கு
மேனியும் பளிக்குச்
செழுமலை பதித்ததுப் பன்ன
பாதமுஞ செவ்வாய் மலருமுக் கண்ணும்
பங்கயச் செங்கர நான்கும்
வேதபுத் தகமு மமுதகும் பமுந்தன்
விழிமணி வடமுமெய்ஞ் ஞான
போதமுத் திரையுந் தரித்ததோர் தனிமைப்
போதன்முன் றாழ்ந்தெழுந் தேத்தா. |
(இ
- ள்.) சீதளம் பளிக்கு மேனியும் - குளிர்ந்த பளிங்கு (மலை
போன்ற வெள்ளிய) திருமேனியும், செழுபளிக்கு பதித்த துப்பு அன்ன
பாதமும் - ஒளி நிறைந்த அப்பளிக்கு மலையின் அடியிற் பதித்த பவளம்
போன்ற திருவடிகளும், செவ்வாய் மலரும் - சிவந்த திருவாயாகிய தாமரை
மலரும், முக்கண்ணும் - மூன்று கண்களும், பங்கயச் செங்கரம் நான்கும் -
தாமரை மலர்போன்ற சிவந்த திருக்கைகள் நான்கும், வேத புத்தகமும் -
வேதத் திருமுறையும், அமுத கும்பமும் - அமுதம் நிறைந்த கலசமும்,
தன்விழி மணிவடமும் - உருத்திராக்க மணி மாலையும், மெய்ஞ்ஞான போத
முத்திரையும் - சிவஞானத்தைத் தெளிவித்தருளும் சின்முத்திரையும். தரித்தது
ஓத் தனிமைப் போதன் முன் - தரித்த ஒப்பற்ற தேசிகனாகிய
தட்சிணாமூர்த்தி திருமுன்னர், தாழந்து எழுந்து ஏத்தா - வணங்கி எழுந்து
துதித்து எ - று.
வேத
புத்தகம் முதலியவற்றை நான்குகையிலும் தரித்தவென்க. வேத
புத்தகம் என்பது சிவஞான போதத்தைக் குறிக்கும்
என்பர் : பின்
இவ்வாசிரியரே,
"போதம்வரை
புத்தக மிடக்கையது பொற்ப."
"புத்தகத் தெழுதிய சிவஞான மெய்ப்போதம்
கைத்தலந்தரித் திருப்பதோர் கருணையைக் கண்டார்." |
என்றும் கூறுவர்; புத்தகம்
தரித்தல் - சிவஞானத்தை யுணர்த்துவ தோர்
குறிப்புப் போலும். தன்விழி - உருத்திராக்கம். சின்முத்திரையின் பொருட்
குறிப்பானது.
"மும்மலம் வேறுபட்
டொழய மொய்த்துயிர்
அம்மலர்த் தாணிழ லடங்கு முண்மையைக்
கைம்மலர்க் காட்சியிற் சிந்தி யாதரோ." |
என்று கச்சியப்ப
முனிவரால் திருவானைக்காப் புராணத்தில்
உணர்த்தப்பட்டுளது. தரித்தது என்பதனைத் தரித்தவென எச்சமாகக் கொள்க.
தரித்த தாகிய கரம் நான்கும் எனக் கூட்டி யுரைத்தலுமாம். (14)
|