வடநிழ லமர்ந்த மறைமுதன் மேதா
மனுவெழுத் திருபது மிரண்டுந்
திடமுற வரபத் தன்றனாற் றெளிந்து
தேணிறை மதிமுத லடைவிற்
படுமதி யளவுந் தருப்பண மோமம்
பார்ப்பன வுண்டிமுப் போதும்
அடைவுற நுவன்று நோற்குமா தவர்மு
னருமறைப் பொருள்வெளி வருமால். |
(இ
- ள்.) வடநிழல் அமர்ந்த மறைமுதல் மேதா - கல்லாலின்
நிழலிலமர்ந்தருளிய வேத முதலாகிய தட்சிணாமூர்த்தியின், இருபதும்
இரண்டும் எழுத்து மனு - இருபத்திரண்டு எழுத்து வடிவமாகிய மந்திரத்தை,
அரபத்தனால் திடம் உற தெளிந்து - அரபத்த முனிவனால் உறுதிபெறத்
தெளிந்து, தேள்நிறை மதிமுதல் - கார்த்திகைத் திங்களின் பூரணை முதலாக,
அடைவில் படுமதி அளவும் - அடுத்த கார்த்திகைத் திங்களின் பூரணை
வரையும், தருப்பணம் ஓமம் பார்ப்பன உண்டி முப்போதும் அடைவுற -
தருப்பணமும் ஓமமும் பார்ப்பன வுணவும் மூன்று காலமும் பொருந்துதலுற,
நுவன்று நோற்கும் மாதவர்முன் - செபித்து நோற்கின்ற முனிவர்கள் முன்,
அருமறைப் பொருள் வெளிவரும் - அறிதற்கரிய மறைகளின் பொருளாயுள்ள
இறைவன் (அவர்களறிய) வெளிப்பட்டு வருகின்றான் எ - று.
மேதா
- ஞானி; தென்முகப் பெருமான்; மந்திரத்தின் பெயராகக்
கொண்டு மேதாமனு வென்றும் உரைப்பர். அடைவுற என்றமையால்
அவற்றைச் செய்து என்க. தெளிந்து நுவன்று நோற்கும் எனக் கூட்டுக.
ஆல் : அசை. (15)
[கலிவிருத்தம்]
|
|
மானமுனி வோரதி
சயிப்பவட நீழல்
மோனவடி வாகி முதற்குரவ னெண்ணான்
கூனமி லிலக்கண வுறுப்பகவை நானான்
காணவொரு காளைமறை யோன்வடிவ மாகி. |
(இ
- ள்.) மானம் முனிவோர் அதிசயிப்ப - பெருமை பொருந்திய
அம்முனிவர்கள், அதிசயமெய்த, வடநீழல் மோனவடிவு ஆகிய முதல் குரவன்
- கல்லாலின் நிழலிலமர்ந்த மௌன வடிவத்தையுடைய பரம குருவானவன்,
ஊனம் இல் எண்ணான்கு இலக்கண உறுப்பு - குற்ற மில்லாமுப்பத்திரண்டு
இலக்கணமுடைய உறுப்புக்களுடன் கூடிய நானான்கு அகவை ஆன -
பதினாறு வயதுள்ள, ஒரு காளை மறையோன் வடிவம் ஆகி - ஒரு
குமாரனாகிய வேதிய னுருவங் கொண்டு எ - று.
சின்
முத்திரையை மோனமுத்திரை யென்றுங் கூறுவர்; திருமுருகாற்றுப்
படையில், ஒருகை மார்பொடு விளங்க என்பதற்கு முனிவர்க்குத்
தத்துவங்களைக் கூறி உரையிறந்த பொருளை யுணர்த்துங் காலத்து
|